மிகக் குறைந்த காலமே கர்ப்பத்தில் இருந்த குழந்தை பிறந்தபின்னும் அதிசயமாகப் பிழைத்துள்ளது

32 வாரங்களுக்கும் குறைவான கர்ப்ப காலத்தில் பிரசவிக்கப்படும் குழந்தைகள் தங்கள் வளர்ச்சியில் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று அறிவியலாளர்கள் சொல்கிறார்கள்.

22 வாரங்களுக்குக் குறைவான கர்ப்பத்தில் பிறக்கும் குழந்தைகளோ உயிர் பிழைக்கும் வாய்ப்புகளுமில்லை, ஏனெனில், கருவின் 22-ம் வாரத்தில் தான், இருதயம், நுரையீரல், மூளை என்ற முதன்மையான உடல் உறுப்பின பகுதிகள் முழுமையடைகின்றனவாம்.

ஆனால், 21 வாரங்களும் ஐந்தே நாள்களும் ஆன சிசுவொன்று ஜெர்மனியில் பிறந்து அதிசயத்தக்க வகையில் உயிர் பிழைத்துள்ளது. ஃபிரைடா என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஜெர்மனியக் குழந்தை, மிகக் குறைந்தகாலமே கர்ப்பவாசம் Buy cheap Bactrim செய்து பிறந்துள்ளதன் மூலம், உலகிலேயே குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுள் முதன்மையானதாக ஆகி உள்ளது.

மேற்கு ஜெர்மனியின் ஃபல்தா நகரிலுள்ள மருத்துவமனையொன்றில்  கடந்த வருடம் நவம்பர் ஏழாம் தேதி பிறந்த அக்குழந்தை ஒரு பவுண்ட் (அரை கிலோவுக்கும் குறைவு) எடையும், 11 இஞ்ச் என்ற அளவிலும் தான் இருந்ததாம் ஃப்ரைடாவுடன் கூடவே ஒரு சகோதரனும் இரட்டையருள் ஒருவனாகப் பிறந்திருந்தான். கில்லியன் என்று பெயரிடப்பட்டிருந்த அவன் பிறந்த மிகச் சிலநாள்களில் இறந்துப் போய்விட்டான்.

அதனால் மிக விசேடமாக மருத்துவமனையில் பெரும் கவனிப்புக்குள்ளாக்கப்பட்ட ஃப்ரைடா சுவாசத்துக்கும் , உணவுக்கும் வேண்டிய கருவிகளின் உதவியோடு ஐந்தரை மாதங்களாக மருத்துவர்களால் பராமரிக்கப்பட்டாள். உணவு கூட தொப்புள்கொடியின் மூலமாகவே செலுத்தப்பட்டதாம்.

தற்சமயம் 7.7 பவுண்ட் எடையுடன் 50 செ.மீட்டர் அளவிலும் உள்ள ஃப்ரைடா விரைவில் இல்லம் சேர்வாள் என்றும், இனி மற்ற எல்லாக் குழந்தைகளைப் போலவே அவள் வளர்வதில் எந்தப் பிரச்னையும் இருக்காது என்று தாம் நம்புவதாகவும், அந்த மருத்துவமனை மருத்துவர் ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Add Comment