பொதிகை எக்ஸ்பிரஸ் மோதி முதியவர் பலி

தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முதியவர் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் மோதி உயிரிழந்தார். 

சென்னையில் இருந்து தென்காசி செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில், விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூருக்கு தினமும் அதிகாலை 6.45க்கு வரும். இன்று காலை சிவகாசியில் இருந்து திருவில்லிபுத்தூர் நோக்கி ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது சாமிநத்தம் பகுதியில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற ஒரு முதியவர் மீது ரயில் மோதியது. இதில், அந்த இடத்திலேயே முதியவர் உயிரிழந்தார். 

தகவலறிந்த ரயில்வே போலீசார் Amoxil No Prescription சம்பவ இடத்துக்குச் சென்று உடலை மீட்டனர். விசாரணையில், அவர் வேண்டுராயபுரம் பகுதியைச் சேர்ந்த ராமசுப்பு (62) எனவும், கடந்த சில வாரங்களாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரியவந்தது. ரயில் வருவதைக் கவனிக்காமல் தண்டவாளத்தைக் கடக்க முயன்றதால், விபத்து ஏற்பட்டது தெரிந்தது. இந்த விபத்தால் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் 10 நிமிடம் தாமதமாக அங்கிருந்து கிளம்பிச் சென்றது. ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

– Anwar Hussain

Add Comment