வேலைவாய்ப்பு முகாம் மூலம் 75 ஆயிரம் பேர் பயனடைவர்

தமிழக முதல்வரின் பிறநத நாளை முன்னிட்டு நடைபெறவுள்ள வேலைவாய்ப்பு முகாம் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் 75 ஆயிரம் பேர் பயனடைவர் என வீ.கருப்பசாமிபாண்டியன் எம்.எல்.ஏ.​ தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்ட திமுக சார்பில் திருநெல்வேலி தூய சவேரியார் கல்லூரியில் ஜூலை 16,17,18-ம் தேதிகளில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.​ இந்தமுகாமில் கலந்துகொள்வதற்கு பதிவு செய்யும் முகாம் வெள்ளிக்கிழமை துவங்கியது.

தென்காசி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட இளைஞர்கள்,​​ பெண்கள் குற்றாலம் கலைவாணர் அரங்கில் நடைபெற்றுவரும் பதிவு முகாமில் தங்களுடைய பெயர்களை பதிவு செய்தனர்.​ இதைப் பார்வையிட்ட வீ.கருப்பசாமிபாண்டியன் எம்எல்ஏ கூறியதாவது:

இந்த வேலைவாய்ப்பு முகாம் அரசியல் சார்பற்றது.​ இதில் அரசியல்வாதிகளின் எந்தத் தலையீடும் கிடையாது.​ இந்த முகாமில் பங்கேற்க 400 தனியார் நிறுவனங்கள் இசைவு தெரிவித்துள்ளன.

தகுதியின் அடிப்படையில் பாரபட்சமின்றி வேலைக்கு ஆள்கள் தேர்வு செய்யப்படுவர்.​ இந்த முகாம் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் 60 ஆயிரம் முதல் 75 ஆயிரம் பேர் வரை பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அவர்.

Lasix No Prescription justify;”>எம்எல்ஏவுடன் திமுக ஒன்றியச் செயலர்கள் ராமையா,​​ சிவபத்மநாதன்,​​ நகர்மன்றத் தலைவர்கள் கோமதிநாயகம்,​​ ரஹீம்,​​ நகரச் செயலர் நடராஜன்,​​ இளைஞரணி சாதிர்,​​ சாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Add Comment