இரண்டாண்டுகளாக எண்ணற்ற பணிகள் நடைபெற்ற பள்ளிவாசல் கை விட்டு போகும் சூழ்நிலை! உதவுங்கள்!

சென்னையின் இருதயப் பகுதியான திருவல்லிக் கேணியில் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் சகோதரர் ஒருவரின் காலி நிலத்தில் அவரின் அனுமதியோடு நோன்பு நேர இப்தார்,இரவு பயான் நிகழ்சிகள் நடை பெற்றது! இது அப்பகுதி மக்களிடம் வரவேற்பை பெற்றது நோன்பு நேரத்தில் ஐவேளை தொழுகையும் நடை பெற்று பின்னர் அதை அப்பகுதி மக்கள் நீடிக்க விரும்பி இடத்தின் உரிமையாளரும் கட்டிடம் கட்டும் சூழல் தள்ளிப் போனதால் அது பள்ளி வாசலாகவே செயல் பட்டு வந்தது!

ரமலான் மாதத்தில் இப்தார் இரவுத் தொழுகை ,தொடர் பயான் என நிரம்பி வழிந்த பள்ளி ரமலானுக்கு பின்னும் மக்களால் நிறைந்தது! ஜும்மா அன்று நெருக்கி நின்றாலும் ரோட்டுக்கு வரும் சூழலும் , வியாழன் தோறும் பெண்கள் பயானில் கால் வைக்க இடமில்லாத அளவிலும் , சனி தோறும் ஆண்கள் பயான் , ஞாயிறு தோறும் மகல்லா சகோதரர்களின் , மருத்துவ மனை தாவா , முஸ்லிம் அல்லாதவர்களுக்கான இஸ்லாம் அறிமுக நிகழ்ச்சி இஸ்லாத்தை ஏற்றோருக்கான வழி காட்டு நிகழ்ச்சி, அவர்களுக்கான கத்னா, அபிடவுட், ஏற்பாடுகள் , மேலும் சகாத், நன்கொடைகள் மூலம் பல்வேறு மருத்துவ உதவிகள் கல்வி உதவிகள், வாழ்வாதார உதவிகள், மருத்துவ முகாம்கள் , கல்வி வழி காட்டு முகாம்கள் என எண்ணற்ற பணிகள் இறையருளால் நடை பெற்று வந்தன.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடத்தின் உரிமையாளர் அங்கு வந்து நேரில் பார்த்துவிட்டு நீங்கள் பள்ளியாக சிறந்த பணிகள் நடை பெற்று வருவதால் நீங்களே விலைக்கு எடுத்து கொள்ளுங்கள் என விலையையும் நிர்ணயம் செய்து சதுர அடி 7500 ருபாய் [820sq] என ஒப்புக் கொண்டு அதற்க்கு மற்றக அவருக்கு வேறு இடம் பார்த்து அதற்க்கு அவர் அக்ரிமேண்டும் போட்டு வரும் 17.5.11 உடன் அந்த இடத்திற்கு நம்முடைய தொகையை கொடுக்க வேண்டும்! இல்லை என்றால் இரண்டு ஆண்டுகளாக எந்த முன் பணமோ வாடகையோ இன்றி கொடுத்த அவரிடம் இடத்தையாவது திருப்பிக் கொடுக்க வேண்டும்!

அன்பார்ந்த சகோதரர்களே ! வெளி நாடு வாழ் நண்பர்களே ! மிகக் குறைந்த நாட்களே உள்ளதால் , நற்பணிகள் நடை பெறும் இந்த இடம் நம் கையை விட்டு போகாமல்; இருக்க இன்ஷா அல்லாஹ் சதுர அடி 7500 ருபாய் என்கிற அளவில் நாமும் நம் நண்பர்களையும் வாங்கத் தூண்டுவோம்! மேலும் தங்கள் பெற்றோருக்காக வாங்கி அதன் நன்மையை அவர்களுக்காக சேர்க்கும் அன்பர்களை நாடுவோம், மேலும் பள்ளிக்காக தரும் தனவந்தர்களை அறிமுகப் படுத்துவோம்! குறுகிய அல்லது நீண்ட கால கடன்களாக Buy Bactrim அல்லாஹ்விற்காக அழகிய கடன் தரும் அன்பர்களை நாடுவோம் ! மறுமையில் அல்லாஹ் வாக்களிக்கும் மாளிகையை பெற எல்லா வகைகளிலும் முயற்சிப்போம் ! மேலும் நம்முடைய பிரார்த்தனைகளில் இந்த விஷயத்தை மறவாமல் அணு தினமும் கேட்போமாக ! அல்லாஹ் நம் காரியங்களை சீராக்கி வைப்பான் .

இது தொடர்பாக நீங்கள் அழைக்க வேண்டிய தொலை பேசி எண்கள் ; 9677103519, 9600037600 9840078002, 9840077765
நன்கொடைகள் அனுப்ப வேண்டிய முகவரி : அல்முமின் டிரஸ்ட் 32 அங்க முத்து தெரு பெசன்ட் ரோடு ராயபேட் ,சென்னை -14 .
almumin trust a\c no : 301500301000487 vijaya bank triplicane.branch

Add Comment