காரணமில்லாத திடீர் மயக்கம்

நன்றாக இருக்கும் ஒரு மனிதர் திடீரென்று எந்த ஒரு காரணமும் இல்லாமல் மயங்கி விழுந்து விட்டார் என்றால் அதற்கு காரணம் மேனியர் நோயாகக்கூட இருக்கலாம். மேனியர் என்பது காதுக்குள் வரும் ஒரு நோய்.

பிராஸ்பர் மேனியர் என்ற பிரெஞ்சு டாக்டர் 1861 – ல் இதைக் கண்டுபிடித்தார். அதனால் இதற்கு அவரது பெயரையே வைத்துவிட்டனர். online pharmacy without prescription நமது உள் காதில் எண்டோளிம்ப் என்ற திரவம் இருக்கிறது. இந்த திரவத்தில்தான் ஒளியை உணரக்கூடிய நரம்புகள் மிதந்தபடி இருக்கும். இந்த திரவம் குறிப்பிட்ட அளவில் இருக்கும் வரை பிரச்சினை இல்லை. ஆனால் சில நேரங்களில் எந்தவித காரணமும் இல்லாமல் திடீரென்று அதிகமாக சுரக்கிறது. இதுதான் மேனியர் நோய்க்கு காரணமாகிறது.

ஆனால் இந்த திரவம் ஏன் திடீரென்று அதிகமாகச் சுரக்கிறது என்பதற்கான சரியான காரணம் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஒருவிதமான அலர்ஜி என்று பொதுவான காரணத்தைத்தான் சொல்கிறார்கள். தலை அசையும்போது உள்காதில் உள்ள இந்த எண்டோளிம்ப் திரவமும் அசைகிறது. இந்த அசைவு, எண்டோளிம்ப் திரவத்தின் மீது படர்ந்து கிடக்கும் பாலன்ஸ் நரம்புகளின் தூண்டுதல்களும் விபரீத எல்லையை தொட்டு நம்மை மயக்கத்தில் சரிந்து விழ வைத்து விடுகிறது.

இது யார் – யாருக்கு வரும் என்று இனம் பிரித்து சொல்வது முடியாத காரியம். யாரை வேண்டுமானாலும் இது பாதிக்கலாம். ஆண் – பெண் என்ற பாகுபாடு இதற்கு கிடையாது.

இதை சாதாரண ஒரு தடுமாற்றமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஹார்ட் அட்டாக்குக்கு இணையான ஒன்றாக கருதவேண்டியுள்ளது. எந்த வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென்றுதான் இந்த மேனியர் நோய் தாக்குகிறது. விளைவு… தலைசுற்றி சடாரென்று விழுந்துவிடுவோம்.

இது தவிர இதன் உடன்பிறப்புகளான காது இரைச்சல், காது கேளாமை ஆகியவையும் சேர்ந்து கொள்ளும். சிலருக்கு இந்த தாக்குதல் 20 நிமிடங்கள் வரை இருக்கும். பின் நார்மல் நிலைக்கு திரும்பி விடுவார்கள். இன்னும் சிலரை இது இரண்டு மணி நேரம் வரை கூட மயக்கத்திலையே வைத்திருக்கும். சிலருக்கு குணமான பின்பும்கூட, சரியான பாலன்ஸ் கிடைக்காமல் நாள் கணக்கில் கூட தடுமாறும் நிலை தொடரும்.

மேனியர் அட்டாக், ஒரு முறை வந்து விட்டால் மீண்டும் அது எப்போது வேண்டுமானாலும் வரலாம். எனவே இவர்கள் டிரைவிங் போன்ற போன்ற வேளைகளில் ஈடுபடக்கூடாது. அது அவர்களுக்கு மட்டுமல்ல அடுத்தவர்களின் உயிருக்கும் ஆபத்தை கொண்டுவந்துவிடும்.

இந்த மேனியர் அட்டாக்கில் இருந்து தப்பிக்க வழியே இல்லையா என்றால், சாப்பாட்டில் உப்பை கணிசமாக குறைத்துக் கொள்வதுதான் ஒரே வழி. ரத்தத்தில் உப்பின் அளவு அதிகரிக்கும் பட்சத்தில் இந்த மேனியர் நோயின் வீரியமும் அதிகரிக்கிறது. ஒருமுறை இந்த அட்டாக் வர்ந்தவர்கள் அதன்பின் ஆல்கஹால், புகையிலை போன்றவற்றை தொடவே கூடாது.

இதற்கென்று சில மாத்திரைகளும் கிடைக்கின்றன. இவற்றின் மூலம் 85 சதவீதத்தினர் பூரணமாக குணமடைந்து விடுவார்கள். மீதி 15 சதவீதம் பேருக்கு ஆபரேஷன் செய்வதுதான் ஒரே வழி.

(தினத்தந்தி 30 / 04 / 2011 /)


Mohamed musthafa…

Add Comment