கடையநல்லூரில் ரூ.22 கோடியில் குடிநீர் திட்ட பணி

கடையநல்லூர் நகராட்சியில் 22 கோடி ரூபாய் செலவிலான குடிநீர் புரனமைப்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் ககன்தீப்சிங்பேடி உத்தரவிட்டார். கடையநல்லூர் நகராட்சி பகுதியில் 22 கோடி ரூபாய் செலவில் குடிநீர் திட்ட புரனமைப்பு பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. தேர்தலுக்கு முன்பாக இதற்கான அனுமதி பெறப்பட்ட நிலையில் பூமி பூஜையும் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து பணிகள் நடைபெற்ற நிலையில் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது இப்பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

கடையநல்லூர் நகராட்சி பகுதியில் 25 ஆண்டுகளுக்கு தேவையான குடிநீரை அடிப்படையாக கொண்டு திட்டம் வகுக்கப்பட்டதுள்ளது. இந்திரா நகர், மாவடிக்கால், பேட்டை, கிருஷ்ணாபுரம், குமந்தாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக வாட்டர் டேங்குகள் அமைக்கப்படுகின்றன. அனைத்து பகுதிகளுக்கும் சீராக குடிநீர் கிடைத்திடும் வகையில் இத்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் கடையநல்லூர் நகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் புரனமைப்பு திட்ட பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் ககன்தீப்சிங்பேடி நேற்று ஆய்வு செய்தார். பெரியசாமி அய்யனார் கோயில் பகுதியில் அமைக்கப்படவுள்ள கிணறுகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

 

தொடர்ந்து கருப்பாநதி அணைக்கட்டு பகுதியில் தற்போது நகராட்சிக்கு வழங்கப்பட்டு வரும் நீர் ஆதாரம் குறித்து கேட்டறிந்தார். குமந்தாபுரம், மலம்பாட்டை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு Viagra online வரும் திட்டப் பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து கடையநல்லூர் நகராட்சியில் வடிகால் வாரியம் மூலம் நடைபெற்று வரும் புரனமைப்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

 

மேலாண்மை இயக்குநருடன் குடிநீர் வடிகால் வாரிய முதன்மை பொறியாளர் கோதண்டராமன், மாவட்ட கண்காணிப்பு பொறியாளர் ரவீந்திரன், செயற்பொறியாளர் குத்தாலிங்கம், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் மோகன், நகராட்சி கமிஷனர் அப்துல்லத்தீப், இன்ஜினியர் நடராஜன், இளநிலை பொறியாளர் அகமதுஅலி, பில்டிங் இன்ஸ்பெக்டர் சேக்உதுமான், ராமகிருஷ்ணன் உடன் சென்றனர்.

Add Comment