தென்காசி பகுதியில்மாம்பழ விற்பனை ஜோர்

தென்காசி பகுதியில் மாம்பழங்கள் விற்பனை அதிகளவில் நடக்கிறது.தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மாந்தோப்புகள் அதிகளவில் உள்ளன. இங்கிருந்து ஆண்டு தோறும் விளையும் மாங்காய்கள் பழுக்க வைக்கப்பட்டு வெளி மாநிலங்களுக்கு, buy Levitra online வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தற்போது மாம்பழ சீசன் என்பதால் மாம்பழ விற்பனை அதிகளவு உள்ளது.
தென்காசி, மேலகரம், சுந்தரபாண்டியபுரம், மத்தளம்பாறை, திரவியநகர், இலஞ்சி, வல்லம், கொட்டாகுளம், தெற்குமேடு, புளியரை, கட்டளைக்குடியிருப்பு, பண்பொழி, பெரியபிள்ளைவலசை, கற்குடி, இலத்தூர், ஆய்க்குடி, சாம்பவர்வடகரை, பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விளைந்த மாங்காய்களை மொத்த வியாபாரிகள் வாங்கி பதப்படுத்தி வெளியிடங்களுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். மேலும் சில்லரை விற்பனையும் நடக்கிறது.
மாம்பழங்கள் ரகம் வாரியாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. சப்போட்டா பங்கனவல்லி கிலோ 20 ரூபாய்க்கும், கல்லானம் 15 ரூபாய்க்கும், செந்தூரான் 25 ரூபாய்க்கும், நிமோனியா 15 ரூபாய்க்கும் மொத்த விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை விற்பனையில் இதன் விலை இருமடங்காக இருக்கிறது. அதிகளவில் கேரளாவிற்கு மாம்பழ ஜூஸ் தயாரிக்க லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது.

Add Comment