குற்றாலத்தில் குவிந்தசுற்றுலா பயணிகள்

குற்றால அருவிகளில் குளிக்க நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கோடை மழை காரணமாக மலைகளில் நீர்பிடிப்பு பகுதிகளிலிருந்து குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டியது. தற்போது மழை இல்லாததால் அருவிகளில் படிப்படியாக தண்ணீர் குறைய துவங்கியுள்ளது.குற்றாலம் மெயின் அருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் மட்டும் குறைந்தளவு தண்ணீர் விழுந்தது. பெண்கள் பகுதியில் சுத்தமாக தண்ணீர் விழாததால் ஆண்கள் குளிக்கும் பகுதியில் பெண்களும் வரிசையில் நின்று குளித்து சென்றனர். ஐந்தருவியில் 2 கிளைகளில் குறைவாகவே தண்ணீர் விழுந்தது. இந்த அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.புலியருவி, சிற்றருவி, பழையகுற்றாலம் Lasix No Prescription போன்ற அருவிகளில் தண்ணீர் இல்லாததால் அருவிப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

Add Comment