அகஸ்தியர் அருவி தடாகத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

அகஸ்தியர் அருவி தடாகத்தில் மூழ்கி கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
கோயம்புத்தூர் ராசிபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் அங்குள்ள தனியார் கம்பெனியில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள். அதில் மூத்தவர் மனோஜ்குமார் (20). இவர் கோவையில் உள்ள மகாராஜா கல்லூரியில் முதலாம் ஆண்டு கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்து வந்தார்.
கோடை விடுமுறையை முன்னிட்டு தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் அகஸ்தியர் அருவிக்கு சுற்றுலா வந்தார். வந்த இடத்தில் இவரது உறவினர்கள் அனைவரும் அகஸ்தியர் அருவியில் குளித்துக் கொண்டிருக்க மனோஜ்குமார் மற்றும் அவரது உறவினர் கார்த்திக் ஆகிய இருவரும் அகஸ்தியர் அருவியின் அருகாமையில் உள்ள தடாகத்திற்கு குளிக்க சென்றனர். தடாகத்தில் இறங்கிய இவர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக சென்றவர்கள் இருவரையும் காப்பாற்ற முயன்றதில் கார்த்திக் மட்டுமே காப்பாற்றப்பட்டார். மனோஜ்குமார் தடாகத்திற்குள் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் மற்றும் அம்பை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. buy Viagra online தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடாகத்தில் கிடந்த மனோஜ்குமாரின் உடலை மீட்டனர்.
இச்சம்பவம் குறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீட்கப்பட்ட மனோஜ்குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Add Comment