கடையநல்லூர் கலகம்! KNTJ உதயம் !

கடையநல்லூர் கலகம்! KNTJ உதயம் !
பி.ஜே. Vs சைபுல்லாஹ் ஹாஜா.

தன்னைத் தவிர வேறு யாரும் தலையெடுக்க கூடாது, எதிர்த்து கேள்வி Buy Viagra Online No Prescription கேட்பவர்கள் எவரும் இருக்கக் கூடாது, தன்னை மட்டுமே பின் பற்றும் செய்யும் ஒரு கூட்டத்தை உருவாக்கி தனி மத்ஹபு என்கிற ரீதியில் பொய் கொண்டிருக்கும் பி.ஜே.வின் பிரித்தாளும் பாலிசியால் கொள்கை சகோதரர்களுக்கு மத்தியில் மீண்டும் ஒரு பிளவு உருவாகியுள்ளது!

கடந்த சில மாதங்களாக புகைந்து கொண்டிருந்த கடையநல்லூர் விவகாரம் வெடித்து மற்றுமொரு பிளவு ஏற்பட்டுள்ளது! தன் பெயரில் முஸ்லிம் டிரஸ்ட் , மற்றும் முஸ்லிம் மீடியா டிரஸ்ட் என இரு டிரஸ்ட் களை வைத்துக் கொண்டு , அமைப்பில் உள்ள வேறு யாரும் டிரஸ்ட் வைத்துக் கொள்ளக் கூடாது ! என குரான் ஹதிஸ் அல்லாத தானே வகுத்துக் கொண்ட ஒரு கூறு கெட்ட கொள்கைக்காக இன்னும் எத்தனை பிரிவுகளோ தெரியவில்லை!

இந்த பிரச்சனையால் முதலில் கீழக்கரை KECT , மற்றும் நாச்சியார் கோயில் பள்ளி எனத் தொடங்கி தற்போது கடைய நல்லூரிலும் வெடித்துள்ளது! சமிபத்தில் த.த.ஜ.வில் இணைந்த த.மு.மு.க. முன்னால் மாநில செயலாளர் புளியங்குடி செய்யது கூட புளியங்குடி தவ்ஹீத் பள்ளியை த.த.ஜ.வில் இணைக்க மறுத்து த.த.ஜ.வில் இருந்து வெளியேறினார் [இந்த பள்ளியில் கடந்த வாரம் ஜும்மா உரை சைபுல்லாஹ்] என்பது குறிப்பிட தக்கது!

டிரஸ்ட் என்பது கூடாது த.த.ஜ.வில் இணைப்பது தான் சரி என்றால் முதலில் தன் பெயரில் உள்ள இரு டிரஸ்ட் களையும் இணைத்து அதில் த.த.ஜ. உறுபினர்களை சேர்க்க வேண்டும்! அதை செய்வாரா? தன்னுடைய மகன்கள் மற்றும் சகலை மகன்கள், மருமகன் பெயரில் திருட்டுத் தனமாக பதிவு செய்த INTJ சங்கத்திற்கு 20 லட்சம் மதிப்புள்ள சொத்திருப்பதாக நீதி மன்றத்தில் கூறியுள்ளரே அந்த சங்கத்தில் த.த.ஜ.வை சேர்ந்த அனைவரும் உறுப்பினராக்கி விட்டாரா? உபதேசம் எல்லாம் ஊருக்கத் தானா?

தற்போது இந்தப் பிரச்சனையால் கடையநல்லூர் த.த.ஜ உடைந்து இரண்டானதோடு ரியாதிலும் TNTJ -KNTJ என இரண்டாக உடைந்து நிற்கிறது! கடையநல்லூரில் போய் மக்களின் மண்டையை கழுவ நினைத்த பி.ஜே.விற்கு பெருந்தோல்வி மட்டுமே மிச்சமானது! அப்துன்நாசிர் மூலம் பி.ஜே துவங்கிய கலகம் மஸ்ஜிதுல் முபாரக் நலச் சங்கம் என உருவாகி தங்கள் சொத்தை தற்காத்துள்ளனர் கடைய நல்லூர் மக்கள். வெறும் ஆம்புலன்ஸ் வேனை மட்டுமே சைபுல்லஹ்விடம் இருந்து வாங்கிக் கொண்டு வெளியேறி உள்ளனர் த.த.ஜ.வினர்.

தற்போது அண்ணனின் அடி வருடிகள் வழக்கம் போல், அண்ணனின் வழக்கமான பாலியல் மற்றும் பொருளாதார குற்றச்சாட்டுகளை சைபுல்லாஹ் மேல் அள்ளி வீசத் துவங்கியுள்ளனர். இணையத் தளம் நாறிக் கொண்டுள்ளது! மக்கள் கேட்பதெல்லாம் சைபுல்லாஹ் மேல் பல வருடங்களாக சொல்லப் பட்டு வரும் குற்ற சாட்டுகளை பள்ளிவாசலை எழுதிக் கொடுக்க மறுத்து பி.ஜே.வின் கட்டளையை புறக்கநிதவுடன் வெளியிட்டு நாறடிக்கிறீர்களே! சைபுல்லாஹ் தரப்பினர் பள்ளியை பி.ஜே.சொன்னபடி எழுதிக் கொடுத்திருந்தால் அவர் புனிதமானவர் ! உங்களின் பரிசுத்த இயக்கத்தில் மேலாண்மை செய்ய தகுதியானவர் ! எதிர்த்தால் இழிவானவர் !. என்னே உங்கள் நிலைப்பாடு !

Add Comment