கடையநல்லூரில் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

கடையநல்லூர் நகராட்சிப் பகுதியில் குழாய் உடைப்பு சீர் செய்யப்படாததால் குடிநீர் வீணாகி வருகிறது. Ampicillin No Prescription கடையநல்லூர் நகராட்சிக்குள்பட்ட பல பகுதிகளில் குடிநீர்ப் பிரச்னை நிலவி வருகிறது.

பொதுமக்கள் குடிநீருக்காக விவசாயக் கிணறுகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இப்படி குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் பெரிதும் அவதியுற்று வரும் நிலையில், கடையநல்லூர் பகுதியில் குடிநீர் வீணாகி வருவது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நகராட்சி பூங்கா அருகே நிலத்துக்கடியில் பதிக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், குடிநீர் வீணாகி வெளியேறி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் இது குறித்து துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

Add Comment