தென்காசி செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் மே 6-ல் வளாகத் தேர்வு

தென்காசி செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அப்போலோ டயர் நிறுவனம் சார்பில் வளாகத் தேர்வு 6-ம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து கல்லூரியின் தலைவர் மா.புதியபாஸ்கர்,கல்லூரி முதல்வர் ஆர்.சுந்தரராஜன் ஆகியோர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

அப்போலோ டயர் நிறுவனம் சென்னை கிளையில் உற்பத்திப் பிரிவில் பணியாற்ற, 2011-ல் டிப்ளமோ முடித்த மாணவர்களை கேம்பஸ் இன்டர்வியூ மூலம் தேர்வு செய்து உடனடியாகப் பணி ஆணையும் வழங்க உள்ளது. இதில் கலந்து கொள்ள டிப்ளமோ மெக்கானிக்கல், ஆட்டோ மொபைல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இறுதியாண்டுத் தேர்வில் 5-ம் பருவம் வரை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உயரம் குறைந்தபட்சம் 165 செ.மீ. இருப்பதுடன் 18 முதல் 21 வயதுக்கு உள்பட்ட மாணவர்களே தகுதியுடையவர்களாவர். பயிற்சியின் போது முதலாம் ஆண்டில் ரூ. 8ஆயிரமும், இரண்டாவது ஆண்டில் ரூ. 9 ஆயிரமும் வழங்கப்படும். பயிற்சிக்குப்பின் திறன் வாய்ந்தவர்களுக்குத் தொடர்ந்து நல்ல ஊதியத்துடன் நிரந்தர பணி நியமன ஆணை வழங்கப்படும்.

Doxycycline online style=”text-align: justify;”>மேலும் கோம்ஸ்டார் ஆட்டோமோடிவ் என்ற நிறுவனத்துக்கும் நேர்காணல் நடைபெறுகிறது. இதில் டிப்ளமோ படித்த அனைத்துப் பிரிவு மாணவர்களும் கலந்து கொண்டு வேலைவாய்ப்பைப் பெறலாம். வயது வரம்பு,உடற்கூறுத் தகுதி கிடையாது. மாணவர்கள் மட்டுமே வளாகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு முகாமுக்கு கல்லூரியின் சார்பில் சிறப்புப் பேருந்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. தென்காசி புதிய பேருந்து நிலையத்திலிருந்தும், பழைய பேருந்து நிலையத்திலிருந்தும் காலை 8.30, 9.00, 9.30 மணிக்கு கல்லூரிப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நேர்காணலில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் இந்தப் பேருந்துகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு கல்லூரி முதல்வர், துணை முதல்வர் ஏ.முருகேசன், வேலைவாய்ப்பு அலுவலர் சொ.கருப்பனன் ஆகியோரிடம் நேரில் சென்று தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

– Anwar Hussain

Add Comment