தஞ்சை, நெல்லை கோவை உட்பட தமிழகத்தில் 9 இடங்களில் பாஸ்போர்ட் மையங்கள்

தமிழகத்தில் 9 இடங்களில் பாஸ் போர்ட் மையங்கள் வரும் ஜூலை மாதத்திற்குள் திறக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

நாடு முழுவதும் மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் மூலம் பாஸ்போர்ட் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒருவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தால் குறைந்த பட்சம் no prescription online pharmacy 45 நாட்களுக்கு பிறகே இப்போது பாஸ் போர்ட் கிடைக்கிறது. இந்த நிலையில் பாஸ்போர்ட் வழங்கும் பணியை டாடா டெலி சர்வீசஸ் என்ற தனியார் நிறுவனம் மூலம் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பெங்களூரில் 2 இடங்கள், அம்பாலி, சண்டிகர், லூதியானா உட்பட பரிசோதனை அடிப்படையில் தற்போது 7 பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையங்கள் நாடு முழுவதும் திறக்கப்பட்டுள்ளது.

தற்போது செயல்பட்டு வரும் பாஸ்போர்ட் அலுவலகங்களில் எமிகிரேசன், போலீஸ் கிளியரன்ஸ் சர்டிபிகேட் வழங்குதல் உள்ளிட்ட பணிகளே இனி நடைபெறும். பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையங்களில் டாடா நிறுவன ஊழியர்களுடன் பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி ஒருவரும் பணியில் இருப்பார். அதிகார பூர்வ ஆவணங்களில் கையெழுத்திடுவது மட்டும் இவரது பணியாக இருக்கும். தற்போது ஆயிரம் ரூபாய் பாஸ்போர்ட் பெற கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தனியார் நிறுவனம் இந்த பணியை செயல்படுத்துவதன் மூலம் கட்டணம் 75 சதவீதம் அதிகரிக்கலாம்.

தமிழகத்தில் சென்னையில் 3 இடங்களில், மதுரை, நெல்லை, திருச்சியில் 2 இடங்கள், தஞ்சாவூர், கோவை ஆகிய 9 இடங்களில் பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையங்கள் திறக்கப்பட உள்ளன. இவற்றில் தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி ஆகியவை தற்போது மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் இல்லாத இடங்களில் திறக்கப்பட உள்ள அலுவலகங்கள் ஆகும்.

– S. Anwar Hussain

Add Comment