வளைகுடாவில் அமைதி நிலவும் நாடுகளில் முதலிடத்தில் கத்தார்

சிட்னியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பொருளாதார மற்றும் அமைதிக்கான மையம் பிரபல பத்திரிகையான எக்கானமிஸ்டுடன் இணைந்து ஒரு நாட்டில் நடைபெறும் கொலைகள், குற்றங்கள், சமூக அமைதியின்மை, ராணுவத்திற்கு செலவிடப்படும் நிதி, அந்நாட்டின் கைதிகள் போன்ற தகவலின் அடிப்படையில் உலகின் மிக அமைதியான நாடுகளின் பட்டியலை தயாரித்துள்ளது.

அப்பட்டியலில் குவைத் வளைகுடாவில் மூன்றாமிடத்திலும் உலகில் 39வது இடத்திலும் உள்ளது. கத்தார் வளைகுடாவில் முதலாவது இடத்திலும் உலகில் 15வது இடத்திலும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கத்தாரை தொடர்ந்து ஓமன் வளைகுடாவில் 2வது இடத்திலும் உலகில் 23வது இடத்திலும் உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் வளைகுடாவில் 4வது இடத்திலும் உலகளவில் 44வது இடத்திலும் உள்ளது. அதனை தொடர்ந்து பஹ்ரைன் மற்றும் சவூதி அரேபியா பட்டியலிடப்பட்டுள்ளது. உலகளவில் நியூசிலாந்து மிக அமைதியான நாடாக பட்டியலிடப்பட்டுள்ளது. நியூசிலாந்தை தொடர்ந்து ஐஸ்லாந்து, ஜப்பான், ஆஸ்திரியா, நார்வேயும் மிக அமைதியான நாடாக பட்டியலில் உள்ளது. அமெரிக்காவை விட மிக அமைதியான நாடாக கியூபாவும் சீனாவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா 85ஆம் இடத்திலும் சீனா 80ஆம் இடத்திலும் உள்ளது. இந்தியாவும் Buy Doxycycline 20 இடங்கள் பின் தங்கி 128ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். ஈராக், சோமாலியா, ஆப்கானிஸ்தான் நாடுகள் அமைதியிழந்த நாடுகளாக பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

Add Comment