அருணாச்சல் பிரதேச முதல்வர் டோர்ஜீ காண்டு மரணம்-உடல் அடையாளம் கண்டுபிடிப்பு

அருணாச்சல பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டூ சென்ற ஹெலிகாப்டர் தவாங்கில் விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது. ஹெலிகாப்டர் விழுந்த இடத்திலிருந்து முதல்வர் டோர்ஜீ உள்ளிட்டோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

காண்டூவின் மரணமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அந்த இடத்திலிருந்து 3 உடல்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது. டோர்ஜீ கதி குறித்தும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது டோர்ஜீயின் மரணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அருணாச்சல பிரதேச முதல்வர் டோர்ஜி கந்து (56), மாநிலத்தின் வடமேற்கு பகுதியில் உள்ள தவாங் பகுதியில் இருந்து தலைநகர் இடா நகருக்கு கடந்த சனிக்கிழமை காலை 9.50 மணிக்கு தனியார் ஹெலிகாப்டரில் புறப்பட்டார். அவருடன் எம்எல்ஏவின் சகோதரி மற்றும் அதிகாரிகள் உள்பட 4 பேர் சென்றனர். 20 நிமிடத்துக்கு பிறகு ஹெலிகாப்டருடனான தகவல் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது.

கடந்த 4 நாட்களாக அவரைத் தேடும் பணி நடந்து வந்தது. இந்நிலையில் இன்று அவரது ஹெலிகாப்டர் லோப்தாங் என்ற இடத்தில், ஜாங் அருவிப்பகுதியில் விபத்துக்குள்ளாகி நொறுங்கிக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கு ஹெலிகாப்டரின் சிதறிய பாகங்களை தேடுதல் படையினர் கண்டுபிடித்தனர். அந்த இடத்தில் அழுகிய நிலையில் உடல்கள் இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அந்த உடல்களை தேடுல் படையினர் மீட்டு பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்தனர்.

மொத்தம் 5 உடல்கள் மீட்கப்பட்டுள்ள. இறந்து நாட்களாகி விட்டதால் அவை அழுகிய நிலையில் காணப்பட்டன. முதல்வர் டோர்ஜீயின் உடலும் அடையாளம் காணப்பட்டு விட்டது.

முன்னதாக இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடம் என்று ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அங்கு சில உடல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. முதல்வர் குறித்த தகவல்கள் சந்தோஷப்படும்படியாக இல்லை. இருப்பினும் தொடர்ந்து உடல்களை அடையாளம் காணும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. buy Levitra online மேலும் விவரங்களுக்காக காத்திருக்கிறோம் என்றார் சிதம்பரம்.

ராணுவத்தில் பணியாற்றியவர்:

ஹெலிகாப்டரில் பயணித்து உயிரிழந்த முதல்வர் டோர்ஜீ, அருணாச்சல் பிரதேச மாநிலத்தின் 6வது முதல்வர் ஆவார். 2 வது முறையாக முதல்வர் பதவியை வகித்து வந்தார்.

முன்பு ராணுவத்தில் உளவுப் பிரிவில் பணியாற்றியவர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.

2வது முதல்வர்:

குறுகிய காலத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழக்கும் 2வது முதல்வர் டோர்ஜீ ஆவார். இதற்கு முன்பு ஆந்திர முதல்வராக இருந்த ராஜேசகர ரெட்டியும் இதேபோலத்தான் ஹெலிகாப்டரில் பயணித்து உயிரிழந்தார் என்பது நினைவிருக்கலாம்.

Add Comment