குற்றாலத்தில் சீர்குலைந்த சாலைபொதுமக்கள் அவதி

குற்றாலத்தில் சீர்குலைந்து காணப்படும் சாலையால் பொதுமக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.குற்றாலத்தில் சீசன் காலத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். வரும் ஜூன் மாதம் சீசன் துவங்க இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக சில அடிப்படை வசதிகள் சுற்றுலா பயணிகளுக்கு செய்து கொடுக்கப்பட வேண்டும். இதன் அடிப்படையில் குற்றாலம் ராமலாயம் பகுதியில் உள்ள பிரதான சாலையை சீரமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கியது. சாலை சீரமைப்பிற்காக கற்கள் குவிக்கப்பட்டிருந்தன. இவை பல மாதங்களாக இருந்ததால் அவ்வழியே வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுபற்றி தினமலரில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.

இதனையடுத்து சாலை அமைக்கும் பணி துவங்கியது. தார்சாலை பெயர்க்கப்பட்டு Buy Amoxil Online No Prescription அதற்கு மேல் கற்கள் விரிக்கப்பட்டன. கல் சாலையாக அமைக்கப்பட்டது. இதன் பின்னர் சாலை பணி எதுவும் நடக்கவில்லை. தற்போது சாலையில் கற்கள் பெயர்ந்து பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வாகனங்கள் அவ்வழியே செல்லும் போது கற்கள் பாதசாரிகள் மீது விழும் நிலை உள்ளது.சீசனுக்கு முன்னதாக இச்சாலையை தார்சாலையாக அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Add Comment