செங்கோட்டை- கண்ணுபுள்ளிமேடு சாலை அகலப்படுத்தும் பணி தீவிரம்

செங்கோட்டை- கண்ணுப்புள்ளிமேடு சாலை அகலப்படுத்தும் Buy cheap Ampicillin பணி 8 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செங்கோட்டை- கண்ணுப்புள்ளிமேடு, வல்லம்- ஐந்தருவி சாலைகளை விரிவாக்கம் செய்திடும் வகையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. செங்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் இருந்து இந்த சாலைகள் அகலப்படுத்தும் பணி மேற்கொள்ளும் வகையில் சுமார் 8 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 7 மீட்டர் அகலம் கொண்ட சாலைகளாகவும், சிறு பாலங்கள், தடுப்பு சுவர்கள் உள்ளிட்ட பணிகளும் இந்த திட்ட மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டது. இதன்படி தற்போது கண்ணுப்புள்ளிமேட்டில் இருந்து ஐந்தருவி- வல்லம் சாலைகளில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பல ஆண்டுகளாக பொதுமக்களால் வலியுறுத்தப்பட்ட சாலை அகலப்படுத்தும் பணி 8 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வருவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Add Comment