கடையநல்லூரில் பதற்றம்,மீண்டும் மர்ம காய்ச்சலா? ஒருவர் மரணம்.

கடையநல்லூரில் மர்ம காய்ச்சலுக்கு வெளிநாட்டில் இருந்து விடுமுறைக்கு வந்தவர் பலியானார். ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவு காரணமாக கடையநல்லூர் பகுதியை சேர்ந்த ஏராளமானோர் நெல்லை, மதுரை உள்ளிட்ட பகுதி ஆஸ்பத்திரிகளுக்கு சென்றுள்ளதாக கூறப்பட்டுள்ளதை அடுத்து பெரும் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.கடையநல்லூர் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன் மர்ம காய்ச்சல் காரணமாக சுமார் 15க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவத்தை அடுத்து கடையநல்லூர் online pharmacy without prescription சுற்றுப்பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த மர்ம காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டோரில் ரத்த அணுக்கள் எண்ணிக்கை குறைவு காரணமாக சிலர் பலியாகி இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

இதனை தொடர்ந்து நகராட்சி பகுதிகளிலும், யூனியன் பகுதிகளிலும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது. இந்நிலையில் கடையநல்லூர் நகராட்சி பகுதியில் மீண்டும் மர்ம காய்ச்சல் பரவி வருவதாக மக்கள் மத்தியில் பெரும் பீதி காணப்பட்டு வருகிறது.

கடையநல்லூர் நகராட்சி பஜார் மெயின்ரோட்டில் வசித்து வந்த இப்ராகிம் (38) என்பவர் மர்ம காய்ச்சலால் கடந்த இரண்டு நாட்களாக பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவர் வெளிநாட்டில் இருந்து விடுமுறைக்காக வந்துள்ளார். காய்ச்சல் பாதித்த இப்ராகிமுக்கு வயிறு வீக்கமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவு காரணமாக இப்ராகிம் இறந்து போனதாக கூறப்படுகிறது.
இதனிடையில் கடையநல்லூர் அல்லிமூப்பன் தெரு உள்ளிட்ட தெருப் பகுதிகளை சேர்ந்த சுமார் 10 பேர் மர்ம காய்ச்சல் பாதித்து நெல்லை மற்றும் மதுரை பகுதி ஆஸ்பத்திரிகளுக்கு ரத்த அணுக்கள் எண்ணிக்கை குறைவு காரணமாக ரத்தம் ஏற்றும் சிகிச்சைக்காக சென்றிருப்பதாகவும் தெரிகிறது. மேலும் கடையநல்லூர் பகுதிகளில் மர்ம காய்ச்சல் காரணமாக பல்வேறு தனியார் ஆஸ்பத்திரிகளில் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிய வந்துள்ளது.மர்ம காய்ச்சல் பீதியால் கடையநல்லூர் நகராட்சி பகுதியில் பெரும் பரபரப்பான நிலை காணப்படுகிறது.

Add Comment