நிவாரணக் கப்பலின் மீதான தாக்குதல்- இஸ்ரேலின் விசாரணைக்கு வெளிநாடுகளின் மேற்பார்வை அவசியம்: பான் கீ மூன்

:காஸ்ஸாவுக்கு மனிதாபிமான உதவிப் பொருட்களை கொண்டுச் சென்ற துருக்கிக் கப்பல்கள் மீது இஸ்ரேல் buy Doxycycline online தாக்குதல் நடத்தியது குறித்த விசாரணைகளை வெளிநாடுகள் மேற்பார்வை செய்ய வேண்டுமென ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.

இஸ்ரேலின் தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணைக் குழுக்கள் விசாரணை நடத்த வேண்டுமென ஐ.நா. முன்வைத்த கோரிக்கையை இஸ்ரேல் நிராகரித்ததைத் தொடர்ந்தே பான் கீ மூன் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச விசாரணைக் குழு விசாரணைகளை நடத்தவேண்டுமென ஐ.நா வலியுறுத்தியதை தொடர்ந்து இத்தாக்குதல் சம்பவம் குறித்து தமது தாமே விசாரணைகளை மேற்கொள்ளப் போவதாக இஸ்ரேல் அறிவித்திருந்தது.

கடந்த மே 31 ஆம் தேதி காஸ்ஸாவை நோக்கிச் சென்ற உதவிக்கப்பல்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 9 பேர் பலியாகினர். இச்சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளப்போவதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

Add Comment