சிபிஐ நீதிமன்றத்தில் கனிமொழி-அவருக்காக வாதாடும் ராம் ஜேத்மலானி!

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி இன்று சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருக்காக நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி ஆஜராகி வாதாடி வருகிறார்.

பட்டியாலா ஹவுசில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி முன் ஆஜராக இன்று காலை 9.30 மணிக்கு தனது இல்லத்திலிருந்து கனிமொழி கிளம்பினார். அவருடன் மத்திய இணையமைச்சர்கள் நெப்போலியன், பழனி மாணிக்கம் மற்றும் குணசேகரன் ஆகிய 3 திமுக எம்பிக்களும் வந்தனர்.

நீதிமன்றத்தில் அவருக்கு முன்பே திமுக எம்பி டி.ஆர்.பாலு தலைமையில் 4 எம்பிக்கள் அங்கு வந்துவிட்டனர். சரியாக 10 மணிக்கு கனிமொழி நீதிமன்றத்துக்கு வந்துவிட்டார்.

அதே போல கலைஞர் டிவியின் நிர்வாகி சரத்குமார் ரெட்டியும் ஆஜராகியுள்ளார். ஆனால், இந்த வழக்கில் இன்று ஆஜராக வேண்டிய சினியுக் நிர்வாக இயக்குனர் கரீ்ம் மொரானி வரவில்லை.

கனிமொழி நீதிமன்றம் வரும் முன்பே சிபிஐ அதிகாரிகள் குழுவும், சிபிஐ வழக்கறிஞர்களும் வந்துவிட்டனர்.

இதையடுத்து சரியாக 10.05 மணிக்கு இந்த வழக்கு விசாரணை தொடங்கியது. கனிமொழிக்காக ராம் ஜேத்மலானி வாதாடி வருகிறார்.

கோர்ட்டுக்குள் Buy Viagra நுழையும் முன் நிருபர்களிடம் பேசுகையில், இந்த வழக்கில் கனிமொழி மீது எந்த குற்றமும் இல்லை. 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் ஒதுக்கீட்டுக்கும் கனிமொழிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான வழக்கில், கலைஞர் டிவிக்கு ரூ. 214 கோடி கடன் வழங்கப்பட்ட விவகாரத்தில் கனிமொழியின் பெயரையும் குற்றப்பத்திரிக்கையில் சேர்த்துள்ளனர். அவரை கூட்டுச் சதியாளர் என்று சிபிஐ வர்ணித்துள்ளது.

இதையடுத்து இன்று சிபிஐ கோர்ட்டில் ஆஜராகுமாறு கனிமொழி உள்ளிட்டோருக்கு சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி. ஷைனி உத்தரவி்ட்டார். அதன்படி இன்று கனிமொழி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளார்.

அவரை காவலில் எடுக்க வேண்டும் என்று சிபிஐ கோரினால், நீதிபதியின் உத்தரவைப் பொறுத்து அவர் கைதாகவும் வாய்ப்புள்ளதால் திமுக தரப்பில் பெரும் டென்சன் நிலவுகிறது.

முன்னதாக மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்டோர், திமுக பிரபலங்கள், எம்.பிக்கள் உள்ளிட்டோர் டெல்லியில் குவிந்துவிட்டனர். தனது தாயார் ராசாத்தி அம்மாள், கணவர் அரவிந்தன், மகன் ஆதித்யாவுடன் கனிமொழி இரு தினங்களுக்கு முன்பே டெல்லிக்கு வந்து விட்டார்.

தமிழக உள்துறைச் செயலாளர் ஞானதேசிகன், அமைச்சர் பூங்கோதையும் டெல்லி வந்துள்ளனர்.

ஏற்கனவே 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தொடர்புடைய ராசா உள்ளிட்டோர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் யாருக்குமே இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை.

மேலும் இன்று ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐந்து தொலைத் தொடர்பு நிறுவன அதிகாரிகள் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுக்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி கைது செய்யப்பட்டால், இந்த வழக்கில் கைதாகும் முதல்வர் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த முதல் உறுப்பினர் அவர் ஆவார்.

Add Comment