மே 9ம் தேதி பிளஸ் 2 முடிவுகள்-25ல் மதிப்பெண் சான்றிதழ்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் 9ம் தேதி வெளியாகும் நிலையில், மதிப்பெண் சான்றிதழ் மே 25ம் Buy cheap Doxycycline தேதி வழங்கப்படும் என்று தெரிகிறது.

தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, டேட்டா சென்டர்களில் மதிப்பெண் சான்றிதழ் அச்சடிக்கும் பணி தொடங்கும். இந்தப் பணி பத்து நாள்களுக்கு மேல் நடைபெறும்.

இதையடுத்து பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளுக்கு மே 25ம் தேதி மதிப்பெண் சான்றிதழ்கள் அந்தந்தப் பள்ளிகளில் வழங்கப்படும்.

இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வை மொத்தம் 7 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் பள்ளிகள் மூலம் நேரடியாகவும், 50,000க்கும் அதிகமானோர் தனித் தேர்வர்களாகவும் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தேர்வு முடிவுகள் 9ம் தேதி காலை தட்ஸ்தமிழ் மற்றும் ஒன் இந்தியா (www.oneindia.in) இணையத் தளங்களில் வெளியாகும்.

முன்னதாக பிளஸ் டூ தேர்வு முடிவு மே 14ம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் சபீதா அறிவித்தார். ஆனால், அவரது அறிவிப்பு தன்னிச்சையானது என்று கூறிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தேர்வு முடிவுகள் மே 9ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

சபீதா முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது திருமணததையும் ஜெயலலிதா தான் தலைமையேற்று நடத்தி வைத்தார்.

Add Comment