செங்கொடிக்கு முஸ்தபா கமால் பதிலுரை…

ஆளுபவன் ஆண்; பேணுபவள் பெண். இதுதான் உலக நியதி. இந்தப் பொருளில்தான் தமிழில் ஆண், பெண் என்று வழங்கப்பட்டு வருகிறது. ஆணும் பெண்ணும் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் முற்றிலும் வேறுபட்டவர்கள். பெண்ணைப்போல ஆணும் ஆணைப்போல பெண்ணும் நடை உடை பாவனைகளை அமைத்துக் கொண்டால் உலகம் ஏற்றுக் கொள்ளாது. இஸ்லாம் பெண்களுக்கென்று சில நடைமுறை ஒழுக்கங்களை வரையறுத்திருக்கிறது. அதுபோலவே ஆண்களுக்கென்றும் சில நடைமுறை ஒழுக்கங்களை வரையறுத்திருக்கிறது. இருபாலருக்கும் பொதுவான நடைமுறை ஒழுக்கங்களையும் வரையறுத்திருக்கிறது. தாஸ் காபிடலையும் மனிபிச்டோவையும் கையில் வைத்துக்கொண்டு இஸ்லாத்தை விளங்க முயற்சிப்பது இயலாத காரியம். கம்யூனிசம் என்பது “எல்லோரும்

எல்லாமும் பெறவேண்டும்; இங்கு இல்லாமை இல்லாத நிலைவேண்டும் ” என்ற பொதுவுடைமைக் கொள்கையைப் போதிக்கிறது என்று சொல்கிறார்கள். இதைத்தான் இஸ்லாம் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவருகிறது. சகாத்தைப் பற்றி ஆழமாகப் படித்தால் இஸ்லாத்தின் பொதுவுடைமைக் கொள்கை புரியும். பொருளாதாரக் கொள்கை விளங்கும்.

உழுபவனுக்கு நிலம் சொந்தம் என்று இஸ்லாம் சொல்கிறது. இதைவிடப் பொதுவுடைமை கொள்கை

வேறுண்டா ? பெண்களை அடங்கிப் போகச் சொல்கிறது இஸ்லாம். அடக்கி ஆளச் சொல்லவில்லை.

ஆண்கள் பெண்களை மென்மையாகக் கையாளச் சொல்கிறது இஸ்லாம்.

செங்கொடி போன்றவர்கள் இஸ்லாமியப் பெண்களுக்காகக் குரல்கொடுக்கவேண்டிய இழிநிலையில் இஸ்லாம் இல்லை. வேதமறையும் வேந்தர் நபிகள் (ஸல்) அவர்களின் போத நெறியும் போதும் எங்களுக்கு. இந்த இரண்டிலும் இல்லாதது வேறு எங்கும் இருக்க முடியாது.

இன்றைய நவீன விஞ்ஞானத்திற்கு கைகொடுத்துவுதவுவதே திருமறைதான் என்ற வுண்மை காம்ரேடுகளுக்கு விளங்க வாய்ப்பில்லை. கம்யூனிச செத்துப்போன தத்துவங்களில் மூழ்கி முத்தெடுப்பதை விட்டுவிட்டு குரானைக் கொஞ்சம் ஆழமாகக் கற்கத் தொடங்கினால் இதுவரை விளங்காத பல விஷயங்கள் விளங்கும்.

கையில் விளக்கை வைத்துக்கொண்டுதான் விளங்காததைத் தேடவேண்டும். விளக்குமாற்றை வைத்துக்கொண்டு தேடினால் எதுவும் விளங்காமல்தான் போகும். எனவே செங்கொடி தனது சிந்தனையை திருமறை-நபி மொழி அடிப்படையில் விரிவு படுத்தினால் buy Ampicillin online அவர் இஸ்லாத்திற்கு வருகிறாரோ இல்லையோ அவருடைய அறிவு விசாலப்படும். இறைவன் அவருக்கு நேர்வழியை

தர எல்லோரும் பிரார்த்திப்போமாக !
அன்புடன்
கமால்

Add Comment