கடையநல்லூரில் மர்ம காய்ச்சல் : சுகாதார துறையினர் நடவடிக்கை

கடையநல்லூரில் மர்ம காய்ச்சல் பரவி வருவதை அடுத்து சுகாதார துறையினர் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

கடையநல்லூர் நகராட்சி பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன் மர்ம காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டனர். அப்போது காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிலர் இன்று வரை உடல் வலி, தலைவலி, மூட்டுவலி போன்றவற்றால் அவதிப்பட்டு வருவதாகவும் கூறி வருகின்றனர்.

இதனிடையில் தற்போது இந்த காய்ச்சல் பாதித்து கடையநல்லூர் பகுதியை சேர்ந்த இப்ராகிம் (38) என்பவர் பலியாகிவிட்டதாக கூறப்படுகிறது. ரத்த அணுக்களின் எண்ணிக்கை buy Cialis online குறைவு காரணமாக இப்ராகிம் இறந்திருக்க கூடும் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடையநல்லூர் நகராட்சி அல்லிமூப்பன் தெரு, மெயின் பஜார் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த சிலர் ரத்த அணுக்கள் எண்ணிக்கை குறைவு காரணமாக நெல்லை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடையநல்லூர் நகராட்சி பகுதிகளில் நேற்று மர்ம காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மற்றும் அதனை கண்டறியும் பணிகளை தீவிரமாக சுகாதார துறையினர் மேற்கொண்டனர். சுகாதார பணிகள் துணை இயக்குனர் கலுசிவலிங்கம் ஆலோசனையின்படி, மாவட்ட மலேரியா அலுவலர் ராமலிங்கம், சொக்கம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ரவி, கடையநல்லூர் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் கைலாசம், பாஸ்கர் மற்றும் சுகாதார பணியாளர்கள் காய்ச்சல் பாதித்ததாக கூறப்படும் பகுதிகளில் தீவிர சுகாதார பணியில் ஈடுபட்டனர்.

இப்பகுதிகளில் சேர்ந்த சிலரிடம் ரத்தங்கள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டது. மேலும் கொசு தொல்லையால் மலேரியா போன்ற காய்ச்சல் ஏற்படாத வகையில் புகை மருந்து அடிக்கப்பட்டது. வீடுகள் தோறும் அபேட் வழங்கப்பட்டது.

Add Comment