தென்றல் காற்றால் மாயமானஅக்னி நட்சத்திர வெயில்

தென்காசி, குற்றாலம் பகுதியில் தென்றல் காற்று வீச துவங்கியதால் அக்னி நட்சத்திர வெயில் மாயமானது இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் வெயில் நேற்று துவங்கியது.தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, புளியரை பகுதிகளில் அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என கருதப்பட்டது. ஆனால் முதல் நாளான நேற்று இதமான தென்றல் காற்று வீச துவங்கியது. மேலும் வெயிலின் தாக்கம் மிக மிக குறைவாக இருந்தது. தென்றல் காற்று வீச துவங்கியதால் அக்னி நட்சத்திர வெயில் மாயமானது. இதே நிலை நீடித்தால் தென்காசி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் அக்னி நட்சத்திர வெயிலில் இருந்து பொதுமக்கள் தப்பித்து விடுவர்.வரும் ஜூன் மாதம் குற்றால சீசன் துவங்க இருக்கிறது. சீசன் விரைவில் துவங்கும் என்பதற்கு அறிகுறியாக குற்றாலம் பகுதியில் வாகை மரங்கள் பூத்து குலுங்கும். சிகப்பு நிறத்தில் காணப்படும் இப்பூக்கள் காண்பதற்கு மிகவும் ரம்யமாக இருக்கும். தற்போது வாகை மரங்களில் சிகப்பு நிற பூக்கள் பூத்திருப்பது சீசனை சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்க தயாராகி விட்டதை உணர்த்துகிறது. இதனால் அக்னி நட்சத்திரம் நிறைவடைந்ததும் சீசன் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது குற்றாலம் மெயின் அருவியில் மிக குறைவாக தண்ணீர் விழுகிறது. ஆண்கள் பகுதியில் மட்டும் மிக மிக குறைவாக விழுந்த தண்ணீரில் சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று குளித்தனர். ஐந்தருவியில் இரண்டு கிளைகளில் மட்டும் மிக குறைவாக தண்ணீர் விழுந்தது. இங்கும் சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்றுதான் குளிக்க நேரிடுகிறது.அக்னி நட்சத்திரம் துவங்கிய நாளில் தென்காசி, குற்றாலம் பகுதியில் மிகவும் ரம்யமான Buy cheap Cialis சூழ்நிலை நிலவியது இப்பகுதி பொதுமக்களுக்கு கிடைத்த வரபிரசாதம் என்றால் அது மிகையல்ல.

Add Comment