பகுத்தறிவு என்பது சில உண்மைகளையும் எற்றுகொள்வதே!

சில வலைதளங்களில் இஸ்லாமிய அதிசியங்கள் என்று வருகின்ற காட்சிகளை, புகைப்படங்களை பார்த்திருப்பீர்கள். இவை அனைத்தும் இறைவனின் சான்று என்று ஒரு சாரர் பரப்பி வருவதும். ஒரு சாரர் அதை மொத்தமாக இதுவெல்லாம் ஒரு சான்றா என்பது போன்று ஒதிக்கி தள்ளி கொண்டும் உள்ளனர் என்பது அறிந்ததே.

சில மாதங்களுக்கு முன்னர் பரபரப்பாக பேசப்பட்ட ருசிய குழைந்தையின் கை மற்றும் கால்களில் தோன்றி மறையும் குரான் வசனம். இதனால் அந்த குழந்தையின் தாய் தந்தை இஸ்லாத்தை ஏற்றதோடு மட்டுமின்றி பலரும் நேரில் கண்டு இஸ்லாத்தை ஏற்றுள்ளனர். இது ஒரு அற்பமான அதிசியம் சான்று என்று சொல்லுபவர்களிடமிருந்து நான் மாறுபடுகிறேன். தக்காளியில், மீனில், மரத்தில், மேகத்தில் அல்லா என்று எழுதியுள்ளதை வேண்டுமானால் பெரிதுபடுத்த தேவை இல்லை தான். இதை போல் மாற்று மதத்தவர்களும் சிவனை, இயேசுவை காண்பித்து கொண்டு தான் உள்ளனர்.

எனினும் மனித உறுப்புகளே ஒரு பெறும் அதிசியமாக திகழ்கையில் அதில் குரானின் வசனங்கள் அழகிய எழுத்து வடிவில் தோன்றுவது என்பது ஜஸ்ட் லைக் தட் என்று விட்டு விட தோன்றவில்லை. ஒரு நிகழ்விற்கு Lasix online விஞ்ஞானம் பதில் சொல்ல வேண்டும், அது பதில் சொல்ல திணறினால் அது ஒரு அதிசியமாக தான் எண்ண தோன்றும். இதுவும் அப்படி பட்ட ஒரு நிகழ்வே. சில மாதங்கள் பொறுத்திருந்து பார்த்தாகி விட்டது, அந்த குழந்தை பல முறை சோதிக்கப்பட்டும் எந்த ஒரு பதிலும் மருத்துவர்களிடம் இதுவரை இல்லை. பதில் சொல்ல திராணி இல்லாத நிலையில் மருத்துவர்கள் இருக்கையில் இது ஒரு மிக பெறும் அதிசியமாகவே கருதுகிறேன். இது மட்டுமில்லை பல வருடங்களுக்கு முன்னர் ஆப்ரிக்காவில் ஒரு சிறுவன் விளையாடி கொண்டிருக்கையில் பாதியில் வந்து குரான் வசங்களை மனப்பாடமாக சொன்னதும் என்னை பொறுத்த மட்டில் ஒரு அதிசியம் தான்.

இதுவரை இந்த நிகழ்வுகளுக்கு பதில் இல்லை. சில முஸ்லிம்களும் இது ஒரு பெறும் விசயமே இல்லை என்று ஒதுக்கி தள்ளியதன் விளைவு என்னவோ? அல்லா மட்டுமே அறிவான். பாமரர்கள் அதிகம் வசிக்கும் நாட்டில் விஞ்ஞானம் பேசி மதத்தை போதிக்க வேண்டுமானால் இன்னும் 200 ஆண்டுகளாவது பிடிக்கும். இது போன்று நிகழ்வுகள் என்னை பொறுத்த வரையில் அவர்களுக்கு தாவா செய்ய ஒரு மிக எளிமையான வழி தான். யார் கண்டார் இது போன்ற பதில் இல்லா அதிசயங்களை பார்த்து ருசியாவில் மட்டும் தான் இஸ்லாத்திற்கு வருவார்களா என்ன ? இந்தியாவில் வரமாட்டார்களா ? வாயிலிருந்து லிங்கம் எடுத்ததற்கே கோடி கணக்கான பக்தர்கள் விழுந்து கிடக்கிறார்கள். நாம் அது போன்று என்ன பொய்யை மாயையை உருவாக்கியா தாவா செய்ய போகிறோம். நடக்கும் நிகழ்வுகளை, அதிசயங்களை அவர்களுக்கு காட்டினாலே நிச்சயம் ஒரு சிலராவது மாறத் தொடங்கி விடுவார்கள்.
ஒருவேளை உங்கள் குழந்தையின் கையிலும் காலிலும் இது போன்று குரான் வாசகம் தோன்றினால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று சொல்ல கூட வேண்டாம் சிந்தித்து மட்டும் பாருங்கள் அது போதும்!

Add Comment