பிளஸ்டூ தேர்ச்சி விகிதம் 85.9%-வழக்கம் போல மாணவிகளே அதிகம்

பிளஸ்டூ Buy Lasix தேர்வில் ஒட்டுமொத்தமாக 85.9 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் விகிதம் 85.15 சதவீதமாகும். மேலும் வழக்கம் போல மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

பிளஸ்டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் ஓசூர் மாணவி கே.ரேகா மாநிலத்திலேயே முதல் இடத்தைப் பிடித்தார்.

மாநில அளவில் தேர்வு எழுதியவர்களில் மொத்தம் 85.9 சதவீத மாணவ, மாணவியர் வெற்றி பெற்றுள்ளனர்.

‘சென்டம்’ போட்டவர்கள்

பிளஸ்டூ தேர்வில் கணிதத்தில்தான் அதிக அளவிலான மாணவர்கள் 200க்கு 200 வாங்கியுள்ளனர்.

கணிதத்தில் மொத்தம் 2720 பேர் சென்டம் போட்டுள்ளனர். வேதியியலில் 1243 பேரும், இயற்பியலில் 646 பேரும், உயிரியலில் 615 பேரும், கம்ப்யூட்டர் அறிவியலில் 223 பேரும் சென்டம் போட்டுள்ளனர்.

அதேசமயம், தாவரவியலில் வெறும் 4 பேருக்கு மட்டுமே 200க்கு 200 கிடைத்துள்ளது.

விலங்கியலில் யாருக்கும் சென்டம் இல்லை

அதேசமயம், விலங்கியல் பாடத்தில் எந்த ஒரு மாணவரும், மாணவியும் 200க்கு 200 எடுக்கவில்லை. இது ஆசிரியர்களிடையே பெரும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மாணவிகளே அதிக தேர்ச்சி

மாணவ, மாணவியரின் தேர்ச்சி விகிதத்தைப் பொறுத்தவரை மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 89 சதவீதமாக உள்ளது. அதேசமயம், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 82.3 சதவீதம்தான்.

ஒவ்வொரு ஆண்டும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று வருகின்றனர். இந்த ஆண்டும் அது அப்படியே நடந்துள்ளது.

அதேசமயம், ஒட்டுமொத்த் தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சற்று அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment