ஆன்லைனில் பள்ளிகள் மூலம் கல்வித் தகுதி பதியலாம்

இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளவர்கள் தங்கள் மதிப்பெண்களை பதிவு செய்ய வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்குச் செல்லத் தேவையில்லை. அவரவர் பள்ளிகள் மூலமே ஆன்லைனில் பதிவு செய்யலாம் என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் buy Lasix online குறிப்பில் கூறியிருப்பதாவது,

இந்த ஆண்டு பிளஸ் டூ-வில் தேர்ச்சி அடைந்துள்ளவர்கள் தங்கள் கல்வித் தகுதியை அவரவர் பயின்ற பள்ளிகளின் மூலம் ஆன்லைனில் பதிவு செய்யலாம்.

பிளஸ் டூ மதிப்பெண் சான்றிதழை வாங்கச் செல்லும் மாணவ-மாணவியர் தங்களது குடும்ப அட்டையை எடுத்துச் செல்லவும். அதில் பதிவுதாரரின் பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

10-ம் வகுப்பு கல்வித் தகுதியை ஏற்கனவே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்துள்ளவர்கள் அதற்கான அடையாள அட்டையை எடுத்துச் செல்லவும்.

தற்போது புதிதாகப் பதிவு செய்பவர்களுக்கு பதிவெண் வழங்கப்படும்.

கல்வித் தகுதியை பதிவு செய்யும் மாற்றுத் திறனாளிகள் பள்ளியில் பதிவு செய்த பிறது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று தங்கள் முன்னுரிமையை பதிவு செய்யலாம்.

இந்த புதிய திட்டத்தால் மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை வாங்கிய கையோடு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் குவிவது தவிர்க்கப்படும் என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் தெரிவித்தார்.

Add Comment