+2 தேர்வில் தவறியவர்களுக்காக சிறப்பு துணைத் தேர்வு தேதி அறிவிப்பு

2010-11 கல்வி ஆண்டுக்கான +2 தேர்வில் தவறியவர்களுக்காக துணைத் தேர்வுகள் மே 22 முதல் ஜூன் 2 வரை நடைபெறுகிறது.மூன்று அல்லது அதற்கு குறைவான பாடங்களில் தோல்வியுற்றவர்கள் அல்லது பல்வேறு காரணங்களால் தேர்வு எழுதத் தவறியவர்கள் சிறப்புத் துணைத் தேர்வை எழுதலாம்.

இதற்கான விண்ணப்பங்களை இன்று தேதி முதல் பெறலாம். தேர்வுக் கட்டணம் ஒரு பாடத்துக்கு ரூ.85, இரண்டு பாடங்களுக்கு ரூ.135, மூன்று பாடங்களுக்கு ரூ.185 ஆகும். +2 தேர்வை பள்ளிகளின் மூலம் எழுதிய மாணவர்கள் துணைத் தேர்வுக்கான விண்ணப்பங்களை தங்களது பள்ளிகளிலேயே பெற்றுக்கொள்ளலாம். மே மாதம் 13 வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும்.அன்று மாலை 5:00 மணிக்குள் பூர்த்திசெய்த விண்ணப்பங்களை பள்ளிகளில் ஒப்படைக்க வேண்டும்.

தனித்தேர்வர்கள்,துணைத் Buy cheap Lasix தேர்வுக்கான விண்ணப்பங்களை மண்டலத் துணை இயக்குநர் அலுவலகம், முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் மற்றும் மாவட்டக்கல்வி அதிகாரி அலுவலகங்களில் மே 16 – 20 ஆம் தேதிகளில் பெற்றுக்கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள், மண்டலத் துணை இயக்குநர் அலுவலகத்தில் மே 24 ஆம் தேதிக்குள் கிடைக்கப்பெறும் வகையில் பதிவு செய்யப்பட்ட அஞ்சலிலோ, நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும்.

சைதாப்பேட்டை-முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம்,அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் உள்ள மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம்,எழும்பூர் – மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம்,அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளியிலுள்ள மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம்,சூளைமேடு ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம், ஆகிய இடங்களில் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும்.

Add Comment