மே 13, துபாயில் சிறப்பு இசை நிகழ்ச்சி மற்றும் குறுந்தகடு வெளியீடு

துபாய் : துபாயில் தேரிழந்தூர் தாஜுத்தீன் பாடல் குழுவினரின் சார்பில் சிறப்பு இசை நிகழ்ச்சி 13.05.2011 வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணிக்கு துபாய் தேரா நாசர் சதுக்கத்தில் அமைந்துள்ள லேண்ட்மார்க் ஹோட்டலில் Buy Ampicillin Online No Prescription நடைபெற இருக்கிறது.

நிகழ்விற்கு கீழக்கரை முஹம்மது மஃரூப் தலைமை வகிக்கிறார். சிறப்பு விருந்தினர்களாக கொள்ளுமேடு கவிஞர் ஃபாரூக் பஜ்லி, ஆலிம் புலவர் திண்டுக்கல் முஹம்மது ஹுசைன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றனர்.

சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கும் கவிஞர்களின் பாடல்களை தேரிழந்தூர் தாஜுத்தீன் குழுவினர் இசையுடன் வழங்கி கௌரவிக்க இருக்கின்றனர்.

மேலும் சிந்தித்துப்பாரு எனும் தத்துவப் பாடல்கள் கொண்ட குறுந்தகடு வெளியிடப்பட இருக்கிறது. மூன் தொலைக்காட்சி இந்நிகழ்வினை ஒலிபரப்ப இருக்கிறது.

மேலதிக விபரங்களுக்கு 055 480 2420 / 050 5429422

Add Comment