கடையநல்லூரை சேர்ந்த கல்லூரி மாணவர் கருப்பாநதி அணையில் மூழ்கி மரணம்.

நண்பர்களுடன் கருப்பாநதி அணைக்கு குளிக்க Ampicillin No Prescription சென்ற கல்லூரி மாணவர் அணையில் மூழ்கி பலியானார். இவரது உடலை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடையநல்லூர் ரகுமானியாபுரம் பகுதியை சேர்ந்தவர் சதாம் உசேன். (19). பி.காம்., முதலாமாண்டு படித்து வந்த இவர் நேற்று முன்தினம் நண்பர்களுடன் கடையநல்லூர் அருகேயுள்ள கருப்பாநதி அணைக்கு குளிக்க சென்றுள்ளார். குளித்துக் கொண்டிருந்த சதாம் உசேன் வெளியே வரவில்லை. பலமணி நேரம் தேடியும் கிடைக்காததால் அணையில் மூழ்கி அவர் இறந்திருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் சதாம் உசேனின் உடலை தேடும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடையநல்லூர் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Add Comment