தென்காசி கல்வி மாவட்டத்தில் இரண்டாம் இடம் அகமது சபீக் 1176 மதிப்பெண்

பிளஸ் 2 தேர்வில் தென்காசி கல்வி மாவட்டத்தில் இலஞ்சி பாரத் மாண்டிச்சோரி பள்ளி இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

இலஞ்சி பாரத் மாண்டிச்சோரி பள்ளியில் 281 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில் மாணவன் அகமது சபீக் 1176 மதிப்பெண்கள் பெற்று தென்காசி கல்வி மாவட்டத்தில் இரண்டாமிடமும், பள்ளியில் முதலிடமும் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் பாடவாரியாக தமிழ் 192, ஆங்கிலம் 191, இயற்பியல் 199, வேதியியல் 199, உயிரியல் 196, கணிதம் 199 ஆக மொத்தம் 1176 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

மேலும் மாணவிகள் அந்தோணி மெர்லிஷா, கிப்டி ஆகியோர் 1172 மதிப்பெண்கள் பெற்று கல்வி மாவட்டத்தில் மூன்றாமிடமும், பள்ளியில் இரண்டாமிடமும் பிடித்துள்ளனர். இதில் மாணவி அந்தோணி மெர்லிஷா பாடவாரியாக Amoxil No Prescription தமிழ் 189, ஆங்கிலம் 192, இயற்பியல் 199, வேதியியல் 198, உயிரியல் 196, கணிதம் 198 ஆக மொத்தம் 1172 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாணவி கிப்டி தமிழ் 191, ஆங்கிலம் 191, இயற்பியல் 199, வேதியியல் 200, உயிரியல் 194, கணிதம் 197 ஆக மொத்தம் 1172 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

மேலும் இப்பள்ளி மாணவி பிரார்த்தனா விருப்ப மொழி பாடமாக சமஸ்கிருதம் எடுத்து 1184 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் பாடவாரியாக சமஸ்கிருதம் 197, ஆங்கிலம் 190, இயற்பியல் 198, வேதியியல் 200, கம்ப்யூட்டர் சயின்ஸ் 200, கணிதம் 199 ஆக மொத்தம் 1184 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

பள்ளியில் 281 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதியதில் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 100 சதவீத தேர்ச்சியாகும். 1100 மதிப்பெண்களுக்கு மேல் 67 பேரும், 1000க்கு மேல் 163 பேரும் பெற்றுள்ளனர். இயற்பியல், வேதியியல், கணிதம், காமர்ஸ், அக்கவுண்டன்ஸி, கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற பாடங்களில் 15 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி முதல்வர் காந்திமதி மோகனகிருஷ்ணன், தாளாளர் மோகனகிருஷ்ணன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள் பாராட்டினர்.

Add Comment