பி.இ., எம்.பி.பி.எஸ். கட்-ஆப் மார்க் 0.5 முதல் 1 வரை உயர்கிறது

இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் Buy Ampicillin ஏராளமானோர் அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ளதையடுத்து பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புக்கான கட்-ஆப் மார்க் உயர்கிறது.

மருத்துவம் (எம்.பி.பி.எஸ்.), பல் மருத்துவம் (பி.டி.எஸ்.), விவசாயம், கால்நடை மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் சேர பிளஸ் டூ தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களின் மதிப்பெண்களும், பொறியியல் படிப்பிற்கு கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களின் மதிப்பெண்களும் கட்-ஆப் மார்க்கிற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வில் அதிகபட்சமாக கணிதத்தில் 2 ஆயிரத்து 720 பேரும், அடுத்தபடியாக வேதியியலில் ஆயிரத்து 243 பேரும், இயற்பியலில் 646 பேரும், உயிரியலில் 615 பேரும் 200-க்கு 200 மதி்ப்பெண் எடுத்துள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகம் ஆகும்.

மேலும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமான மாணவர்கள் கணக்கு மற்றும் அறிவியல் பாடங்களில் 200 மதிப்பெண்கள் வாங்கியுள்ளனர். இது தவிர ஆயிரக்கணக்கான மாணவர்கள் 200 முதல் 185 மதிப்பெண் எடுத்துள்ளனர். இதனால் தொழிற்கல்வியில் சேருவதற்கான கட்-ஆப் மார்க் இந்த ஆண்டு 0.5 முதல் 1 வரை உயரும்.

பொறியியல், மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வரும் 16-ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. விவசாயம், தோட்டக்கலை, வனவியல் மற்றும் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டு வருகின்றது.

Add Comment