வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க யூ.ஏ.இ. பரிசீலனை

சர்வதேச பொருளாதார மந்தநிலையைத் தொடர்ந்து கடந்த 2008 ஆம் ஆண்டு இறுதிமுதல் வளைகுடா நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. அவற்றில் குறிப்பாக துபாயில் வரலாறு காணாத வீழ்ச்சியைத் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டது.

புதி திட்டங்களில் முதலீடு செய்வதை நிறுத்தியதால் அவற்றை நம்பியிருந்த பல நிறுவனங்கள் மூடப்பட்டு, பெரும்பாலோர் வேலை வாய்ப்புகளை இழந்தனர். மேலும் ஆள்குறைப்பு, ஊதியக் குறைப்பு ஆகியவற்றைச் செய்தும் மந்தநிலையிலிருந்து மீளமுடியாமல் தள்ளாடி வருகிறது.

விலைவாசி உயர்வு, வேலையின்மை போன்ற காரணங்களால் மத்தியத் தரைக்கடல் நாடுகளில் மக்கள் புரட்சி ஏற்பட்டதைபோல் தங்கள் நாட்டிலும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கும் நோக்கில்,வெளிநாட்டு ஊழியர்களைக் Viagra No Prescription குறைக்கும் நடவடிக்கையாக புதிய கட்டுப்பாட்டு விதிகளைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது.

முதற்கட்டமாக அடிப்படைக் கல்வித்தகுதியற்ற (UNSKILLED) வெளிநாட்டுத் தொழிலாளிகளுக்கு குறைந்தபட்சக் கல்வித் தகுதியை நிர்ணயிக்கும்படியும், மனிதவள தேவைகளை உள்நாட்டிலிருந்தே பூர்த்திசெய்யவும் இதற்கென அமைக்கப்பட்டுள்ள கமிட்டி பரிந்துரைத்துள்ளது. கட்டுமானப்பணியாளர்களும், லேபர்களுமே இதனால் பெரிதும் பாதிக்கப்படுவர்.இந்த திட்டத்தினால் வீட்டுவேலை பணியாளர்களுக்கு பாதிப்பு இருக்காது என்றும் சொல்லப்படுகிறது.

இதுகுறித்து பேசிய அந்நாட்டு பிரதமரும் துணை ஜனாதிபதியுமான ஷேக் முகமது, சமநிலையற்ற வேறுபாட்டை சரிசெய்து குடிமக்கள் பரவலாகப் பயன்பெரும் நோக்கில் அடுத்த 20 ஆண்டுகளுக்குள் குறிக்கோளை எட்டும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

நன்றி:இந்நேரம்

Add Comment