நக்கீரன் எக்ஸிட் போல்-திமுகவுக்கு 137, அதிமுகவுக்கு 89 இடங்கள் கிடைக்கும்

நக்கீரன் வார இதழ் நடத்தியுள்ள வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணிக்கு 137 இடங்களும், அதிமுக கூட்டணிக்கு 89 இடங்களும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஊடகமும் ஒரு விதமான கருத்துக் கணிப்பை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், நக்கீரன் வார இதழ் ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது.

நக்கீரன் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

பெண்களின் ஓட்டு திமுகவுக்கே

– திமுக கூட்டணியே இந்த முறை வெற்றி பெறும்.

– தி.மு.க. கூட்டணி கணிசமான இடங்களில் வெற்றி பெற முக்கிய காரணங்கள் இரண்டு. வாக்களித்த பெண்களில் அதிகம் பேர் தி.மு.க. கூட்டணிக்கே வாக்களித்துள்ளனர். தி.மு.க. அரசின் நல்வாழ்வுத் திட்டங்களை நேரடியாக அனுபவித்தவர்கள் இவர்கள்.

பணத்துக்கே மக்கள் வாக்களித்துள்ளனர்

– இரண்டாவது காரணம்… பணம். ஓட்டுக்குப் பணம் என்பது மிகவும் ஆரோக்கியமற்ற, ஜனநாயகத்திற்கே ஆபத்தான விஷயம். அதனை இம்முறை அனைத்து கட்சிகளும் செய்துள்ளன. செய்யாத கட்சி யென்று இல்லை. பணம் வாங்கியவர்களில் பாதிபேர் “தர்மம்’ கருதி யார் அதிக பணம் தந்தார்களோ அவர்களுக்கு வாக்களித்துள்ளனர்.

வீணாய்ப் போன காங்கிரஸ்

– காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளுக்கு அடம் பிடிக்காமல் நாற்பது தொகுதிகளை சரியாகத் தேர்வு செய்து தகுதியான வேட்பாளர்களை நிறுத்தியிருந்தால் 35 தொகுதிகளை வென்றிருக்கும் -தி.மு.க. கூட்டணி இன்னும் தன்னம்பிக்கையோடு நின்றிருக்கும். காங்கிரசின் செயல் கூட்டணியின் கணுக்காலை கூட இருந்து வெட்டியமைக்குச் சமம். அக்கட்சி 63 தொகுதிகளில் 23 தொகுதிகளை வென்றாலே மிகப்பெரிய விஷயம்.

வடிவேலுவின் பங்கு அதிகம்

– ஜெயலலிதா, வைகோவை நடத்திய விதம் உட்பட தன் ஆணவத்தால் தி.மு.க. கூட்டணிக்கு உதவியிருக்கிறாரென்றால் விஜயகாந்த்தை “பஞ்சர்’ செய்து முடக்கிப் போட்டதில் வடிவேலுவின் பங்கு முக்கியமானது. தே.மு.தி.க. பத்து தொகுதிகளை வென்றால் அது பெரிய அதிசயம்.

– நல்வாழ்வுத் திட்டங்களே தி.மு.க.-வை Buy cheap Ampicillin கரை சேர்க்கிறது

திமுக கூட்டணிக்கு 137

நக்கீரன் நடத்திய எக்ஸிட் போல் கணிப்பின்படி திமுக கூட்டணிக்கு 137 இடங்கள் கிடைக்கலாம்.

அதிமுக கூட்டணிக்கு 89

அதிமுக கூட்டணிக்கு 89 இடங்கள் கிடைக்கலாம்.

திமுகவுக்கு மட்டும் இத்தேர்தலில் 84 இடங்கள் கிடைக்கும். காங்கிரஸுக்கு 24, பாமக 19, விடுதலைச் சிறுத்தைகள் 6, முஸ்லீம் லீக் 3, மூவேந்தர் முன்னேற்றக் ழகம் 1 என மொத்தம் 137 இடங்களை திமுக பிடிக்கிறது.

அதிமுக கூட்டணியில் அதிமுகவுக்கு மட்டும் 73 இடங்கள் கிடைக்கும். தேமுதிகவுக்கு 7, கொங்கு இளைஞர் பேரவைக்கு 1, சிபிஎம்முக்கு 5, சிபிஐக்கு 2, மனித நேய மக்கள் கட்சிக்கு ஒரு சீட் என மொத்தம் 89 இடங்கள் கிடைக்கும்.

விஜயகாந்த்துக்கு கஷ்டம்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் வெற்றி பெறும் இழுபறியாக காணபப்படுகிறதாம். ரிஷிவந்தியம் தொகுதியில் அவருக்கும், காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜுக்கும் இடையே கடும் மோதல் நிலவுகிறது. இதனால் விஜயகாந்த் வெற்றி பெறுவார் என உறுதியாக கூற முடியவில்லை என்கிறது நக்கீரன்.

அதேபோல திருவள்ளூர், ஆர்.கே.நகர், தளி, சூலுர், மடத்துக்குளம், அரியலூர் சேலம் தெற்கு ஆகிய தொகுதிகளிலும் இழுபறி காணப்படுகிறது.

திமுக வெல்லக் கூடிய தொகுதிகள்

அம்பத்தூர், திருவொற்றியூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, பல்லாவரம், தாம்பரம், உத்திரமேரூர், காட்பாடி, ராணிப்பேட்டை, கே.வி.குப்பம், குடியாத்தம், திருப்பத்தூர், வேப்பணஹள்ளி, பென்னாகரம், பாப்பிரெட்டிபப்பட்டி, திருவண்ணாமலை, கீழ்ப்பென்னாத்தூர், ஆரணி, வந்தவாசி, வானூர், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், சங்கராபுரம், கெங்கவல்லி, ஏற்காடு, சங்ககிரி, சேலம் மேற்கு, ராசிபுரம், சேந்தமங்கலம், ஈரோடு கிழக்கு, அந்தியூர், கூடலூர், குன்னூர், கோவை தெற்கு, கிணத்துக்கடவு, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், திருச்சி மேற்கு, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், துறையூர், பெரம்பலூர், குன்னம், பண்ருட்டி,குறிஞ்சிப்பாடி, தாராபுரம், கவுண்டம்பாளையம், கீழ்வேளூர், மன்னார்குடி, திருவாரூர், நன்னிலம், திருவிடைமருதூர், கும்பகோணம், தஞ்சாவூர், கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை, மானாமதுரை, மேலூர், மதுரை கிழக்கு, மதுரை மத்தி, உசிலம்பட்டி, பெரியகுளம், கம்பம், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, திருவாடானை, தூத்துக்குடி, திருச்செந்தூர், ஒட்டப்பிடாரம், சங்கரன்கோவில், தென்காசி, ஆலங்குளம், பாளையங்கோட்டை.

காங்கிரஸ் வெல்லும் தொகுதிகள்

திருத்தணி, சோளிங்கர், வேலூர், ஓசூர், செங்கம், செய்யார்,திருச்செங்கோடு, ஊட்டி, வால்பாறை, நிலக்கோட்டை, மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மதுரை வடக்கு, ராமநாதபுரம், விளாத்திகுளம், கடையநல்லூர், நாங்குநேரி, குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர்.

விடுதலைச் சிறுத்தைகள்

செய்யூர், அரக்கோணம், ஊத்தங்கரை, திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், சீர்காழி.

பாமக வெல்லக் கூடிய தொகுதிகள்

கும்மிடிப்பூண்டி, மதுரவாயல், செங்கல்பட்டு, திருப்போரூர், காஞ்சிபுரம், ஆற்காடு, அணைக்கட்டு, ஜோலார்ப்பேட்டை, தர்மபுரி, போளூர், செஞ்சி, ஓமலூர், மேட்டூர், பவானி, ஜெயங்கொண்டம், நெய்வேலி, புவனகிரி, மயிலம், ஆலங்குடி.

அதிமுக வெற்றி பெறக் கூடிய தொகுதிகள்

பொன்னேரி, பூந்தமல்லி, ஆவடி, மாதவரம், திரு.வி.க.நகர், ராயபுரம், அண்ணாநகர், தி.நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், ஸ்ரீபெரும்புதூர், மதுராந்தகம், பர்கூர், கிருஷ்ணகிரி, பாலக்கோடு, கலசப்பாக்கம், திண்டிவனம், உளுந்தூர்ப்பேட்டை, கள்ளக்குறிச்சி, ஆத்தூர், எடப்பாடி, வீரபாண்டி, நாமக்கல், குமாரபாளையம், ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம், பெருந்துறை, கோபி, மேட்டுப்பாளையம், அவினாசி, திருப்பூர் வடக்கு, பல்லடம், கோவை வடக்கு, தொண்டாமுத்தூர், சிங்காநல்லூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, நத்தம், வேடசந்தூர், கரூர், குளித்தலை, மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, முசிறி, கடலூர், பூம்புகார், வேதாரன்யம், பாபநாசம், திருவையாறு, ஓரத்தநாடு, விராலிமலை, திருமயம், திருப்பத்தூர், சோழவந்தான், மதுரை மேற்கு, திருமங்கலம், ஆண்டிப்பட்டி, போடி, ராஜபாளையம், சிவகாசி, பரமக்குடி, முதுகுளத்தூர், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, வாசுதேவநல்லூர், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், கன்னியாகுமரி, நாகர்கோவில்.

தேமுதிக தொகுதிகள்

ஆலந்தூர், சேலம் வடக்கு, விருத்தாச்சலம், திருப்பரங்குன்றம், விருதுநகர், ராதாபுரம், பத்மநாபபுரம்

கொங்கு இளைஞர் பேரவை

பரமத்தி வேலூர்

சிபிஎம்

பெரம்பூர், அரூர், திருப்பூர் தெற்கு,, திண்டுக்கல், மதுரை தெற்கு.

சிபிஐ

திருத்துறைப்பூண்டி, பவானிசாகர்

மனித நேய மக்கள் கட்சி

ஆம்பூர்.

Add Comment