எரிப்பதா? புதைப்பதா?-முஸ்தபா கமால்

ஆணாதிக்கம் என்று தொடங்கிய வாதங்கள் ஆன்மீகத்தின் பக்கம் சாய்ந்து இஸ்லாமும் கம்யூனிசமும் என்று வளர்கிறது.

இஸ்லாமிய மார்க்கம் எனபது ஏகாதிபத்தியத்தையும் வேறு எந்த அடக்குமுறைகளையும் எதிர்கின்ற ஒரு வாழ்க்கைத் திட்டம். அதை ஒரு மதம் என்ற சொல்லால் அழைக்க முடியாது. பெருமாரின் இறுதி ஹஜ்ஜின் போது ஆண்டான் அடிமை ஏழை பணக்காரன் அரபி அரபி அல்லாதோர் என்ற பாகுபாடுகளை எல்லாம் தகர்த்து எறிந்த வீர அருளுரையை ஒவ்வொரு முஸ்லிமும் அறிவார்கள்.

இதை எல்லாம் வர்க்கப் போராட்டத்தால் வளர்வதாகக் கனவு கண்டு தர்க்கப் போராட்டத்தில் தளர்ந்து மெலிந்து கொண்டிருக்கும் அல்லது செத்து மடிந்து கொண்டிருக்கும் கம்யூனிசவாதிகள் வசதியாக மறந்து விடுகிறார்கள்.

வியர்வை உலருமுன்னே கூலியைக்கொடுத்துவிடு – எனபது நபி மொழி. இந்த நபி மொழி கம்யூனிச
சிந்தாந்தம் கடைப் பிடிக்கப் படும் நாடுகளில் பின்பற்றப் படுகிறதா ? அல்லது அரபு நாடுகளில்-இஸ்லாமிய ஆட்சி நடைபெறும் நாடுகளில் பின்பற்றப் படுகிறதா ? வியர்வை உலருமுன்பே கூலியைக் கொடுத்து விட்டால் கம்யூனிஸ்ட்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும் அல்லவா ?

“நிலம் உள்ளவன் அதனைத் தானே பயிரிடட்டும்; அல்லது இல்லாதவனுக்கு அதை விட்டுக் கொடுக்கட்டும்” எனபது நபிமொழி.
கிணற்றுத் தவளைகளாக இருந்துகொண்டு கம்யூனிஸ்ட்கள் கடவுள் மறுப்புக் கொள்கைகளையும் பொருளாதாரக் கொள்கைகளையும் பேசிவருகிறார்கள்.

பெருமானார் (ஸல்) அவர்களின் போதனைகளிருந்தும், வழி முறைகளிருந்தும் கீழ் கண்ட பொருள்துறை நடவடிக்கைகள் உருவாகின என்று டாக்டர் கலிபா அப்துல் ஹகீம் என்னும் பேராசிரியர் தொகுத்துத் தந்திருக்கிறார் :

1 ) இயற்கையாக அமைந்துள்ள ஆற்றல் சமுதாய அமைப்பின் வாயிலாக கிடைக்கும் தொழில் வாய்ப்புக்கள் காரணமாக சிலர் மர்ரோரைவிட அதிகம் பொருள் தேடுவோராக இருக்கலாம். இயற்கையிலேயே சிலர் மற்ரோரைவிட திறைமை மிக்கோராக இருப்பார். எல்லோரும் சமமான ஆற்றலும் உழைப்புச் சக்தியும் உடையோராகப் பிறத்தல் அரிது; எனவே தன் முயற்சி மூலமாகப் பாடுபடுவதையும் பொருள் தேடுவதையும் தடுத்தல் கூடாது. வஞ்சனை மோசடி போன்ற ஒழுக்கமில்லாத வழிகளில் பணம் தேடுவதை சட்டம் மூலமாகவும் மதபோதனை மூலமாகவும் தடுக்க வேட்ன்டும்.

2 ) எல்லா வகையான வட்டி கொடுக்கல் வாங்கலைச் சட்டபூர்வமாக தடை செய்ய வேண்டும்.

3 .) எல்லா(ஹலாலான) வாணிபமும், வாணிபத்தில் கூட்டும் முதலாளி-பணியாளர் கூட்டுழைப்பும்
அனுமதிக்கப்பட்டவை. ஆனால் இவற்றால் ஏற்படும் லாபமும் நஷ்டமும் போதுவானதாத இருக்க வேண்டும். கூட்டுழைப்பு இருக்க வேண்டுமே தவிர வசதி அற்றோரை சுரண்டுவது இருத்தல் கூடாது.

4 அமித இலாபம் அடைவதற்காக அத்தியாவசியப் பொருட்களை பதுக்கி வைத்தல் தடை செய்யப் படவேண்டும்.

5 . ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருக்கும் சொத்து அமித சொத்தாகக் கருதி அதற்கு வரி விதித்து அந்த வரிப் பணத்தைக் கொண்டு வறியோரும் வசதி இல்லாதோரும் வாழ வழி செய்தல் வேண்டும்.

6 . தனி நபர்கள் தர்மம் செய்வது நன்மையானது தான். ஆனால் ஏழைகளின் அத்தியாவசியத் தேவைகளை அரசு கண்காணித்து நிறைவு செய்தல் வேண்டும்.

7 நியாயமான வாரிசு முறை அமுல் படுத்தப் படவேண்டும். ஆணும் பெண்ணும் குறிப்பிட்ட விகிதப் படி சொத்தில் பங்கு பெறவேண்டும்.

8 தன் வாழ்நாளில் ஒரு மனிதன் தன் சொத்தின் மீது பூரண ஆதிக்கம் பெற்றிருந்தாலும் சிலருக்கு லாபமும் சிலருக்கு நஷ்டமும் விளையும் வகையில் அவன் தன் உடைமைகளை உயில் எழுதி
வைத்தலாகாது. தன் சொந்த விருப்பப்படி அவன் மூன்றில் ஒரு பகுதி உடைமைகளைத்தான் கொடுக்க முடியும். சட்ட பூர்வமான வாரிசுகளின் உரிமைகளை அவர்கள் இழக்கும்படி செய்ய லாகாது.

9 . பகட்டான உல்லாசமான வாழ்வுமுறை தடைசெய்யப்பட வேண்டும். நாணயங்களாகவும் பண மார்ருக்காகவும் தங்கத்தைப் பயன்படுத்தலாம். பெண்கள் மட்டும் அதிலிருந்து நகைகள் செய்து கொள்ளலாம். பொன்னும் பட்டும் ஆண்களுக்கு விலக்கப்பட்டவை.

10 உழ்ஜிக்காது பாடுபடாது உண்ணுதல் கூடாது. இது செல்வருக்கும் வறியோருக்கும் தீமை பயப்பதாகும். பிச்சை எடுத்தலை அவமானமாகக் கருத வேண்டும். ஒருவனுக்கு பிச்சை கொடுப்பதி விட அவன் பிழைப்புக்கு தகுந்த வழி செய்து கொடுப்பது மேலானது.

11 ஒருவன் இறந்ததும் அவன் சொத்தை கிரமப்படி வாரிசு விகிதப் படி பங்கிட்டுக் கொடுத்தல் வேண்டும் மூத்தவனுக்கு மட்டும் உரிமை என்ற (நிலப்பிரபுத்துவ முறை) தவறானது. அது ஆன்டன் அடியான் என்ற வழி முறையைத்தான் வலுப்படுத்தும்.

(Islamic Ideology PP 341-342)(தித்திக்கும் திருமறை பக்கம் 205 -206 )
என்றெல்லாம் பெருமானாரின் பொருளாதாரக் கொள்கைகளை விவரிக்கின்றார்.

கடவுளை மறுத்து இஸ்லாத்தை வெறுத்து பொய் வாழ்க்கை வாழும் கம்யூனிஸ்டுகளுக்கு இறைவன் இதயத்தில் இட்டுவிட்ட முத்திரையால் உண்மைகள் விளங்கவில்லை.

நாங்கள் கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொள்ள கிஞ்சிற்றும் அருகதை அற்றவர்கள். அவர்கள் சுயநல வாதிகள் என்பதால் முஸ்லிம் பெண்ணை மணந்து கொண்டு முஸ்லிம்கள் வாழும் ஜமாத்தில் வசித்துக்கொண்டு, இறந்த பிறகு பள்ளிவாசல் மைய வாடியில் அடக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு போலியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் இறந்தால் எந்த மதச் சடங்கின் படி அவர்களின் இறுதிச் சடங்குகள் இருக்கும் என்பதை செங்கொடி போன்றவர்கள் விளக்குவார்களா ?
அவர்களைப் புதைக்க வேண்டுமா ? எரிக்கவேண்டுமா? அல்லது காகம் நரிகளுக்கு இரையாக
காடு வனாந்தரத்தில் எறிய வேண்டுமா ?

ஒவ்வொரு Cialis No Prescription ஊரிலும் உள்ள முஸ்லிம்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய விஷயம் இது.

Add Comment