‘ரிசல்ட் கவுண்டவுன்’… சரவெடிகளுடன் காத்திருக்கும் கழக தொண்டர்கள்!!

இதற்கு முன் எந்தத் தேர்தல் முடிவுகளுக்காகவும் இத்தனை படபடப்போடு கழகத் தொண்டர்கள் காத்திருந்திருப்பார்களா என்று தெரியவில்லை.

தொண்டர்களை விடுங்கள்… சாமானிய மக்கள் தொடங்கி, அரசியல் விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள், சினிமாக்காரர்கள் என அனைத்துத் தரப்பினரும் பெரும் ஆர்வத்தோடு தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைக் காண காத்திருக்கிறார்கள்.

வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய ஒரு மணி நேரத்தில் முதல் சுற்று நிலவரமும், சிறிய தொகுதிகளின் முழு நிலவரம் மதியம் ஒரு மணியளவிலும் பெரிய தொகுதிகளின் முழு நிலவரம் மாலை 4 மணியளவிலும் தெரியும் என்று தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளார்கள். ஆனால் 11 மணிக்குள் எந்தக் கூட்டணிக்கு சாதகமான நிலை உள்ளது, யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்ற போக்கு (Trend) தெளிவாகத் தெரிந்துவிடும்.

இதுவரை நடந்த தேர்தல்களில் இதுதான் நிலை. ஆனால் இந்த முறை மட்டும் தேர்தலுக்கு முந்தைய பிந்தைய கணிப்புகள் அனைத்துமே எந்தக் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கும் என்பதில் இழுபறி நிலவுவதாகவே கூறுகின்றன.

எனவே திமுக – அதிமுக தலைமையிலான இரண்டு அணிகளுமே தங்கள் அணியே வெற்றிபெறும் என்று அதற்கான கொண்டாட்ட ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.

இதுவரை 6 எக்ஸிட் போல் முடிவுகள் வந்துள்ளன. இவற்றில் நக்கீரன், ஹெட்லைன்ஸ் டுடே, ஸ்டார் நியூஸ் ஆகியவற்றின் கருத்துக் கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாகவும், சிஎன்என் ஐபிஎன், நியூஸ் எக்ஸ், ஏசியாநெட் போன்றவை அதிமுகவுக்கு சாதகமாகவும் கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளன.

எனவே தங்கள் அணிக்குதான் வெற்றி என்ற நம்பிக்கையில் இரண்டு அணிகளுமே தடபுடல் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.

திமுக – அதிமுக தொண்டர்கள்…

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வெள்ளிக்கிழமையன்று திமுக தொண்டர்கள் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்திலும், அதிமுக தொண்டர்கள் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமையகத்திலும் காலை 7 மணியளவிலிருந்தே வரத் தொடங்கிவிடுவார்கள்.

இந்தத் Buy Levitra தொண்டர்கள் ஒவ்வொரு சுற்றுத் தேர்தல் முடிவுகளையும் தெரிந்துகொள்ளும் வண்ணம் இரண்டு கட்சிகளுமே தலைமையகத்தில் தேர்தல் முடிவுகளை ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து உள்ளன.

கட்சியின் தலைமை இந்த ஏற்பாடுகளைச் செய்துள்ள நிலையில் இரு அணியின் தொண்டர்களுமே வெற்றியைச் சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர். வாணவேடிக்கை, பத்தாயிரம்வாலா பட்டாசுகளுடன், மேள தாளம் முழங்க இந்த வெற்றியை கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர்.

Add Comment