இதெல்லாம் அம்மா நிறைவேற்றுவாங்களா?

அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை (2011): தாலிக்கு அரை பவுன், இலவச லேப்டாப், விசிறி, மிக்சி, கிரைண்டர்

அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் பெண்களின் தாலிக்கு அரைபவுன் தங்கம், குடும்ப பெண்களுக்கு ஃபேன், மிக்ஸி, கிரைண்டர் என ஏராளமான இலவசங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க., தேர்தல் அறிக்கைவிபரம் வருமாறு;

* குடும்ப ரேஷன் கார்டுகளுக்கு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தொடரும் என்ற நிலையை மாற்றி, பயனாளிகள் அனைவரும் பயன்பெறும் வகையில் மாதம் 20 கிலோ Buy Bactrim Online No Prescription அரிசி இலவசமாக வழங்கப்படும்.

*நுண்ணிய வேளாண்மை திட்டத்தை செம்மைப்படுத்தி, அதன்மூலம் விவசாயிகளை பங்குதாரர்களாக கொண்ட விவசாய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு, சொட்டு நீர்ப்பாசன வசதி அரசு செலவில் அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக வழங்கப்படும்.

* வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் 20லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தூய்மையான குடிநீர் இலவசமாக வழங்கப்படும். இதன்மூலம் 5.6 லட்சம் பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.

* வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள மூன்று லட்சம் மக்களுக்கு 300 சதுர அடியில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் இலவசமாக நவீன பசுமை வீடுகள் கட்டித்தரப்படும். மேலும் 40 லட்சம் நடுத்தர வகுப்பு மக்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் மான்யத்துடன் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.

* வீடில்லா ஏழை குடும்பங்களுக்கு வீடுகட்ட 3 சென்ட் இடம் அளிக்கப்படும்.

* வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள் வீடுகளுக்கு சூரிய ஒளிமூலம் தடையில்லா மின்சார வசதி இலவசமாக வழங்கப்படும்.

* பால் உற்பத்தியை தினமும் 2.5 மில்லியன் லிட்டரிலிருந்து 10 மில்லியன் லிட்டராக பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வகையில் தமிழகத்திலுள்ள 6,000ம் கிராமங்களில் 60 ஆயிரம் கறவை மாடுகள் இலவசமாக வழங்க வழிவகை செய்யப்படும்.

* வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள அடித்தட்டு மக்களுக்கு நான்கு ஆடு இலவசமாக வழங்கப்படும்.

* அனைவருக்கும் தரமான, இலவச கல்வி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

* பள்ளி மாணவர்களுக்கு 4 சீருடை, காலணிகள் இலவசமாக வழங்கப்படும்.

* அரசு மற்றும் தனியார் பள்ளியில் படிக்கும் ப்ளஸ் 1, ப்ளஸ் 2 மாணவ, மாணவியர்களுக்கு லேப்டாப் கம்ப்யூட்டர் இலவசமாக வழங்கப்படும்.

* அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் (கலை அறிவியல் மற்றும் பொறியியல்) மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக லேப்டாப் கம்ப்யூட்டர் வழங்கப்படும்.

* பெண்களுக்கு ஒரு ஃபேன், ஒரு மிக்ஸி, ஒரு கிரைண்டர் ஆகிய மூன்று பொருட்களும் இலவசமாக வழங்கப்படும்.

* இலவச திட்டங்கள் அனைத்தும் இலங்கை தமிழர்கள் முகாம்களுக்கும் நீடிக்கப்படும்.

* 58 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் உள்ளூர், பக்கத்து நகரங்கள், கிராமங்களுக்கு அரசு பஸ்களில் சென்று வர இலவச பஸ்பாஸ் வழங்கப்படும்.

* ஒவ்வொரு யூனியன் பகுதிகளிலும் முதியோர், ஆதரவற்ற முதியோர், குழந்தைகள் தங்க சிறப்பு தங்கும் விடுதிகள் அமைக்கப்படும். அங்கு தங்குவோருக்கு இலவசமாக உணவு வழங்கப்படும். மேலும் அங்கு புத்தக நிலையம், தியான மண்டபம் ஆகியவை ஏற்படுத்தப்படும்.

* பெண்களுக்கு திருமண உதவித்தொகையாக தற்போது வழங்கப்பட்டு வரும், 25 ஆயிரம் ரூபாயுடன், தங்கத்தின் விலை உயர்வை கருத்தில் கொண்டு, நான்கு கிராம் தங்கம் (அரை பவுன்) மணப்பெண்ணின் திருமாங்கல்யம் (தாலி) செய்ய இலவசமாக வழங்கப்படும். இளநிலை மற்றும் டிப்ளமோ படித்த பெண்களுக்கு திருமண உதவித்தொகை, 50 ஆயிரம் ரூபாயும், நான்கு கிராம் தங்கமும் வழங்கப்படும்.

Add Comment