கடையநல்லூரில் 14 பேர் “டெபாசிட்’ இழப்பு

சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட்ட 16 வேட்பாளர்களில் 2 பேர் மட்டுமே வைப்புத் தொகையை திரும்பப் பெற்றுள்ளனர். எஞ்சிய 14 பேரும் வைப்புத் தொகையை இழந்துள்ளனர்.

தேர்தலில் போட்டியிடுவோர் செலுத்தும் வைப்புத் தொகையை திரும்பப் பெறுவதற்கு, பதிவான வாக்குகளில் செல்லுபடியாகும் வாக்குகளில் ஆறில் ஒரு பங்குக்கு மேலாகப் பெற்றிருக்க வேண்டும் என்பது விதிமுறை. அதன்படி, அதிமுக,  காங்கிரஸ் ஆகிய பிரதான கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் மட்டுமே வைப்புத் தொகையை திரும்பப் பெறக் கூடிய அளவுக்கு வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

கடையநல்லூர் தொகுதியில் மொத்தம் 16 பேர் போட்டியிட்டனர். இவர்களில் அதிமுக வேட்பாளர் செந்தூர் பாண்டியன், காங்கிரஸ் வேட்பாளர் பீட்டர் அல்போன்ஸ் ஆகிய 2 பேரையும் தவிர எஞ்சிய 14 பேரும் வைப்புத் Buy Viagra தொகையை இழந்துள்ளனர்.

Add Comment