உலக கோப்பை கால்பந்து: கானா கலக்கல் வெற்றி

உலக கோப்பை லீக் போட்டியில் “பெனால்டி கிக்’ மூலம் கானா அணி, செர்பியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

தென் ஆப்ரிக்காவில் 19வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. நேற்று பிரிட்டோரியாவில் நடந்த “டி’ பிரிவு லீக் போட்டியில் கானா, செர்பிய அணிகள் மோதின.
இளம் வீரர்களை கொண்ட கானா அணி துவக்கத்தில் இருந்தே தாக்குதல் பாணியிலான ஆட்டத்தை கையாண்டது. ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை இந்த அணியின் அசமாவ் கியான் வீணாக்கினார். மறுபக்கம் செர்பிய வீரர்களின் முயற்சியும் எடுபடாததால், முதல் பாதியில் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை.

buy Levitra online style=”text-align: justify;”>இரண்டாவது பாதியில் செர்பிய அணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. 74வது நிமிடத்தில் முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்ட அலெக்சாண்டர் லூகோவிச் “ரெட் கார்டு’ காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதையடுத்து 10 வீரர்களுடன் செர்பியா விளையாட நேர்ந்தது. பின் கஸ்மனோவிச், பந்தை கையால் தொட்டு தவறு செய்ய, கானா அணிக்கு “பெனால்டி கிக்’ வாய்ப்பு தரப்பட்டது. இதனை பயன்படுத்தி 85வது நிமிடத்தில் கானா வீரர் அசமாவ் கியான் சூப்பர் கோல் அடிக்க, ஆப்ரிக்க ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இறுதியில் கானா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆப்ரிக்க மண்ணில் நடக்கும் இத்தொடரில், முதல் வெற்றியை பெற்ற ஆப்ரிக்க அணி என்ற பெருமையை பெற்றது.

Add Comment