அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு மற்றும் அழகிரியின் திருமண மண்டபம்

சென்னையை அருகே உள்ள படப்பையில் Buy Viagra Online No Prescription நடிகர் வடிவேலுவின் பண்ணை வீட்டின் கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் பொருள்கள் மர்ம நபர்களால் திங்கள்கிழமை அடித்து நொறுக்கப்பட்டது.

படப்பையை அடுத்த புஷ்பகிரி பகுதியில் நடிகர் வடிவேலுவுக்கு மாமர தோப்புடன் கூடிய பண்ணை வீடு உள்ளது. இங்கு வேலு என்பவர் காவலாளியாக வேலை செய்து வருகிறார்.

வேலு தனது குடும்பத்துடன் இந்த தோப்பில் தனி வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் திங்கள்கிழமை மாலை வடிவேலுவின் பண்ணைக்கு வந்த சுமார் 30 க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள், காவலாளி வேலுவிடம் வடிவேலுவின் தொலைபேசி எண்ணைக் கொடுக்குமாறு மிரட்டினராம். அதற்கு அவர், தொலைபேசி எண் தெரியாது என்று கூறினாராம்.

உடனே மர்ம நபர்கள் வேலுவுடைய செல்போனைப் பிடுங்கி அதில் வடிவேலுவின் நம்பர் இருக்கிறதா என பார்த்தனராம். அதில் நடிகர் வடிவேலுவின் எண் இல்லாததால் செல்போனை அவரிடம் கொடுத்த மர்ம நபர்கள், வீட்டின் 6 கண்ணாடி ஜன்னல்களை அடித்து நொறுக்கியுள்ளனர். சுற்றிலுமிருந்த பொருள்கள், பூந்தொட்டிகளையும் உடைத்துத் தள்ளினர்.

மேலும் வரும் சனிக்கிழமைக்குள் இந்த இடத்தை காலி செய்துவிடவேண்டும் என்றும் இல்லையென்றால் நாங்களே ஜேசிபி இயந்திரம் கொண்டு வந்து வீட்டை இடிப்போம் என்றும் மிரட்டிச் சென்றனராம்.

இதையடுத்து காவலாளி வேலு பண்ணை மேலாளர் சங்கருக்கு இந்தத் தகவலைத் தெரிவித்தார். மேலாளர் சங்கர் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இது குறித்து மணிமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

வடிவேலுவின் சென்னை வீடு, மதுரை வீட்டையும் ஏற்கெனவே தேமுதிகவினர் தாக்க முயற்சித்து வருகின்றனர். இதனால் அவர் மதுரையிலேயே தங்கியிருக்கிறார்.

 

மதுரையில் மு.க.அழகிரி திருமண மண்டபம்-ஆதரவாளர் வீடு மீது தாக்குதல்

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து மதுரையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு சொந்தமான தயா திருமண மண்டபம் மீது கல்வீச்சு தாக்குதல் நடந்தது. அதே போல அவரது தீவிர ஆதரவாளரான பொட்டு சுரேஷ் வீடும் தாக்கப்பட்டது.

நேற்று நள்ளிரவில் இந்த மண்டபத்தை சூழ்ந்த சிலர் கல்வீசித் தாக்க ஆரம்பித்தனர். அவர்களை காவலாளிகள் துரத்தியபோது, தாங்கள் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்றும், இனிமேல் உங்களை சும்மா விடமாட்டோம் என்றும் மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

பொட்டு சுரேஷ் வீடு மீது தாக்குதல்:

இந் நிலையில் அழகிரிக்கு மிக நெருக்கமானவருமான சுரேஷ் பாபு என்கிற பொட்டு சுரேஷ் வீடு மீதும் நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதிமுக தரப்பினர்தான் இந்த தாக்குதலை நடத்தியதாக அழகிரியிடம் முறையிட்டுள்ளார் பொட்டு சுரேஷ்.

பொட்டு சுரேஷை தொடர்ந்து மதுரையில் மற்ற திமுக பிரமுகர்கள் வீடு மீதும் தாக்குதல் தொடரலாம் என்பதால் அவர்களின் வீடுகளில் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந் நிலையில் மதுரை திமுக பிரமுகர்களுடன் அழகிரி ஆலோசனை நடத்தி வருகிறார். கவர்னரை சந்தித்து புகார் அளிக்கலாமா என்றும் ஆலோசனை செய்யப்படுவதாகத் தெரிகிறது.

Add Comment