வரலாறு படைத்தது சுலோவேனியா!: உலக கோப்பையில் முதல் வெற்றி

சுலோவேனியா கால்பந்து வரலாற்றில் நேற்று மகிழ்ச்சியான நாள். அல்ஜீரியாவை வீழ்த்தியதன் மூலம் Buy cheap Viagra உலக கோப்பை அரங்கில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
தென் ஆப்ரிக்காவில் 19வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. நேற்று போலக்வானேயில் நடந்த “சி’ பிரிவு லீக் போட்டியில் உலக ரேங்கிங் பட்டியலில் 25வது இடத்தில் உள்ள சுலோவேனியா அணி, அல்ஜீரீயாவை(30வது இடம்) எதிர்கொண்டது.

முதல் பாதியில் இரு அணிகளும் அதிரடி தாக்குதல் நடத்தின. ஆட்டத்தின் 3வது நிமிடத்தில் “பிரீகிக்’ மூலம் அல்ஜீரியாவின் நாதிர் பெல்ஹாட்ஜ் அடித்த பந்து கோல் பகுதியை நோக்கி வந்ததது. இதனை கவனித்த சுலோவேனியா கீப்பர், சமிர் ஹாண்டனோவிச் உயரே பறந்து அருமையாக தடுத்தார். பின் 36வது நிமிடத்தில் அல்ஜீரியாவின் ஹாலிச்சி, கோல் அடிக்கும் வாய்ப்பை நூலிழையில் தவற விட்டார். ஆட்டத்தின் 44வது நிமிடத்தில் சுலோவேனியாவின் பிர்சா அடித்த பந்தை அல்ஜீரிய கீப்பர் பாவ்சி சாவ்ச்சி சூப்பராக தடுக்க, முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
அல்ஜீரியா சோகம்:
இரண்டாவது பாதியில் அல்ஜீரியாவுக்கு சோகமே மிஞ்சியது. 73வது நிமிடத்தில் இந்த அணியின் அப்துல் காதர் கேசல், “ரெட் கார்டு’ காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதையடுத்து 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டது. இதனை பயன்படுத்திக் கொண்ட சுலோவேனிய கேப்டன் ராபர்ட் கோரன், ஆட்டத்தின் 79வது நிமிடத்தில் சாமர்த்தியமாக கோல் அடித்தார். இம்முறை அல்ஜீரியா கோல்கீப்பர் பாவ்சி சாவ்ச்சி அலட்சியமாக செயல்பட்டதால், கோல் வாய்ப்பை தடுக்க முடியவில்லை. இறுதியில் சுலோவேனியா 1-0 என்ற கோல் கணக்கில் வென்று, 3 புள்ளிகளை பெற்றது.
கடந்த 2002ல் உலக கோப்பை தொடருக்கு முதன் முறையாக தகுதி பெற்ற சுலோவேனியா அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடைந்தது. தற்போது முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

Add Comment