என்ன தவறு செய்தார் கருணாநிதி

என்ன தவறு செய்தேன் ஏன் பழிக்காளானேன்
என்னாடு எம்மக்கள் இவர்க்கு எல்லாம்
இன்னா ஏதும் எண்ணாது
நன்னயம் செய்திட நானும் வந்தேன்

கனிமொழி அழகிரி Buy Ampicillin உதயநிதி தயாநிதி
சன் கலைஞ்ர் மானாட மயிலாட
பாசக்கிளிகளும் பொன்னர் சங்கரும்
பாசத்தலைக்கு பாராட்டு விழாக்களும்

அப்பப்பா எத்தனை எத்தனை
அள்ளி அள்ளி விருந்து வைத்தேன்- குறைக்கு
ஆ ராசாவையும் பந்தி வைத்தேன்
சந்தி சிரித்திட தவறு என்ன செய்திட்டேன்

மக்களை பாதுகாக்க மக்களுக்கேவல் செய்தேன்
பயன் செய்தேன் நான் பெற்ற மக்களுக்கு
பலன்பெற்றார் பலகோடிப் பொன்னும் பொருளும்-இதில்
பழிப்பதற்க்கேதும் இல்லை புரிந்து கொள்வீர்

வண்ணத்தொலைக்காட்சி வாரித் தந்தோம்
மின்சாரம் எங்கே என்றால் நான் என்செய்வேன்
இலவசமாய் முட்டை தந்து சத்துணவிட்டேன்
இங்கே விலைவாசி உயர்வு என்றார் இரக்கமின்றி

ஒற்றை ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தந்தேன்
இலவச மின்சாரமும் விவசாயம் தழைத்தோங்க
இவர் பட்ட கடனெல்லாம் ரத்து செய்தேன்
உழவுக்கு ஆள் இல்லையாம் நான் என் செய்ய

கோடி கோடியாய் கொள்ளையடித்தோமாம்
கேடிகள் தாதா கொலை கட்டப்பஞ்சாயத்து
மிரட்டல்கள் விரட்டல்கள் உருட்டுக்கட்டைகள் ……….
மறந்துவீடு மீண்டும் வருவோம் ஐந்தாண்டு கழித்து

ஆடு புலி ஆட்டம் என்று அரசியலில் உண்டு
வெட்டுப்பட்டு நிற்கின்றோம் விழமாட்டோம்
சட்டென முடிவதற்க்குச் சடுகுடு ஆட்டமில்லை
வெட்டுவோம் காசு கொண்டு மீண்டும் வெல்வோம்

அப்துல்லாஹ் சார்
அல்கோபரிலிருந்து

Add Comment