ப்ளஸ் 2 தேறியவர்கள் மே 25 முதல் ஜூன் 08 வரை ஆன்லைன் துணையுடன் அவரவர் பள்ளி மூலம் அரசு வேலைவாய்ப்புக்கு பதிவு செய்யலாம்! -மாவட்ட ஆட்சியர்

மேல்நிலை கல்வித்தகுதியில் (ப்ளஸ் 2) தேர்ச்சி பெற்றவர்கள் ஆன்லைன் துணையுடன் அவரவர் பயின்ற பள்ளிகளிலிருந்தே அரசு வேலைவாய்ப்புக்கு பதிவு செய்யலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சி.நா.மகேஷ்வரன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

2010-2011ஆம் ஆண்டிற்கான மேல்நிலைக் கல்வித்தகுதி தேர்ச்சி பெற்ற சுமார் 14,000 மாணவர்களின் தகுதிகளை ஒரே நாளில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யும்போது ஏற்படும் நெரிசல் மற்றும் கால விரயங்களைத் தவிர்த்திடம் பொருட்டு அவரவர் பயின்ற பள்ளியிலேயே www.tnvelaivaaippu.gov.in என்ற வலைதளம் வழி பதிவு செய்வதற்கான சிறப்பு ஏற்பாடுகள் கல்வித்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, மேல்நிலைக் கல்வி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களின் குடும்ப அடையாள அட்டை, பள்ளியிறுதித் தேர்வு தகுதியைப் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை மற்றும் மேல்நிலைக் கல்வி மதிப்பெண் பட்டியலின் ஜெராக்ஸ் நகலுடன் 08.06.2011 தேதிக்குள் பதிவு செய்துகொள்ளலாம்.

25.05.2011 முதல் 08.06.2011 முடிய பதிவுசெய்யும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே பதிவுமூப்பு வழங்கப்படவுள்ளதால் இவர்கள் அவசரப்படவோ, பதட்டப்படவோ தேவையில்லை.

இப்பணி தொடர்பாக 19.05.2011 மற்றும் 20.05.2011 ஆகிய இரு தினங்களில் தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் மகளிர் மேனிலைப்பள்ளியில் கல்வித்துறை மற்றும் வேலைவாய்ப்புத்துறை மூலமாக கணினி பயிற்றுனர்களுக்கு Cialis No Prescription பயிற்சியளிக்கப்படுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

Add Comment