மும்பையின் நீரோ யார்?

ரோம் நகரம் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையை கேட்டிருக்கிறோம். இதேபோல், மும்பையிலும் ஒரு நீரோ வசிக்கிறார் என்பதை நினைக்கும்போது, ஆச்சர்யமாக இருக்கிறது. சிவசேனா கட்சியின் செயல் தலைவர் உத்தவ் தாக்கரே தான், அந்த நீரோ.

Buy cheap Lasix justify;”>மகாராஷ்டிராவில் உள்ள ஜாய்ட்பூரில், போலீசாரின் நடவடிக்கைகளை கண்டித்து, சிவசேனா கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என, சமீபத்தில் அறிக்கை விட்டார், உத்தவ். அறிக்கை விட்ட கையோடு, கேமராவும், கையுமாக, ம.பி., மாநிலத்துக்கு புறப்பட்டுச் சென்று விட்டார். அங்குள்ள தேசிய வனவிலங்கு பூங்காவில் உள்ள விலங்குகளை புகைப்படம் எடுப்பதில், அவர் மிகவும், “பிசி’யாக இருந்தபோது, ஜாய்ட்பூரில், போலீசாருக்கு எதிரான போராட்டம், உச்சக் கட்டத்தை அடைந்தது. இரு தரப்புக்கும் இடையே, மோதல் ஏற்பட்டு, தீ வைப்பு, அடிதடி சம்பவங்கள் அரங்கேறின. இந்த சம்பவங்கள் எதுவுமே தெரியாதது போல், விலங்குகளை புகைப்படம் எடுப்பதில், ஆர்வமாக இருந்தார் உத்தவ். இது, அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.”இதில் ஆச்சர்யப்படுவதற்கு என்ன இருக்கிறது…?’ என, கிண்டலாக கேட்கின்றனர், மகாராஷ்டிராவில் உள்ள காங்கிரஸ் கட்சியினர். அவர்கள் கூறுகையில், “உத்தவ், இதுபோல் செயல்படுவது, இது முதல் முறையல்ல. ஐந்தாண்டுகளுக்கு முன், பலத்த மழை காரணமாக, மும்பை நகரமே, தண்ணீரில் மூழ்கி தத்தளித்தது. அப்போது, உத்தவ் என்ன செய்தார் தெரியுமா? ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில், நண்பர்களுடன் உல்லாசமாக தன் பிறந்த நாளை கொண்டாடினார்’ என, விரக்தியுடன் கூறினர்.
நன்றி;தினமலர்

Add Comment