சினிமாவிற்கு விருது வழங்கும் விஷயத்தை இந்திய அரசு கை விட வேண்டும்!

சமுதாயத்தை சீரழிக்கும் சினிமாவிற்கு விருது வழங்கும் விஷயத்தை இந்திய அரசு கை விட வேண்டும். விருதுகள் வழங்கி ஊக்குப்பதால்தான், வக்கிரங்களும், வன்முறைகளும், விபச்சாரங்களும் சமுதாயத்தில் சாதாரணமானது என்ற எண்ணத்தை தோற்றுவிக்கிறது. அத்துடன் அது பெருகுவதற்கும் வழி வகுக்கிறது.

போதை ஏற்றும் புகழும், கணக்கற்ற பணமும், நடிப்பு என்ற பெயரில் ஆபாசமும் தவறு இல்லை என்பதால் சிரமப்பட்டு உழைத்து வாழ்வில் சிறுக சிறுக முன்னேற நினைக்கும் இளைஞர்களை இது வழி கெடுக்கிறது. நடிப்பு என்ற பெயரில் சக நடிககைளை கட்டிபிடித்த தனுஷ்க்கும், சிம்புக்கும் பிரதமர் வரை இருக்கும் மதிப்பும் மரியாதை, சாதாரண நிலையில் இருந்து தன் அயாராது உழைப்பால் முன்னேறி ஒரு தொழில் அதிபராக மாறும் ஒரு கல்வியாளருக்கு கிடைக்காது. தயவு செய்து சிந்திப்போம். சினிமாவிற்கு விருது வழங்கிய அரசு பணங்களை வீணடிப்பதை தடுப்போம்!

Viagra online style=”text-align: justify;”>-கீழை ஜமீல்

Add Comment