கடையநல்லூர் நகராட்சி பகுதியில் ரூ.3 கோடியில் சிறப்பு சாலை பணி-விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.

கடையநல்லூர் நகராட்சி பகுதியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் சிறப்பு சாலை திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த பணி முடியும் தருவாயில் உள்ளதால் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று ஆணையாளர் அப்துல் லத்தீப் தெரிவித்தார்.

தமிழக அரசு இயற்கை சீற்றத்தின் காரணமாகவும், பாதாள சாக்கடை திட்டம் மற்றும் buy Ampicillin online குடிநீர் திட்ட பணிகளுக்காக குழாய்களால் சேதமடைந்த சாலைகளை மேம்படுத்த கடையநல்லூர் நகராட்சி ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்தது.

பஸ் செல்லும் சாலை, பாரம்பரிய நகரம், கோவில் நகர், சுற்றுலா தலம், கல்வி நிலையங்கள், சந்தை, மற்றும் தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதிகளுக்கு முன்னுரிமை கொடுக்க அரசு அறிவுறுத்தியது.

இதன்படி ரூ.1 கோடி ரூபாய் மதிப்பிலான பேட்டை மலம்பாட்டை சாலை தார்தளம் அமைக்கும் பணியும், ரூ.54 லட்சம் மதிப்பீட்டில் மேலக்கடையநல்லூர் கரிய மாணிக்கபெருமாள் கோவில் ரத வீதியில் சிமென்ட் கான்கீரிட் தளம் அமைக்கும் பணிகள் உள்பட ரூ.3 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

தமிழக அரசு செயல்படுத்திய சிறப்பு திட்டத்தால் கடையநல்லூர் நகராட்சி பகுதியில் மண் சாலையே இல்லாத சூழ்நிலை உருவாகி உள்ளது.

இந்நிலையில் கரியமாணிக்க பெருமாள்கோவில் ரத வீதிகளும், சிமென்ட் கான்கீரிட் அமைக்கும் பணிகளை நகராட்சி ஆணையாளர் அப்துல் லத்தீப் பார்வையிட்டார்.

கடையநல்லூர் நகராட்சி பகுதியில் சிறப்பு சாலை திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகள் பெரும்பாலானவை முடிவடைந்து விட்டது. இன்னும் ஓரிரு பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதாக நகராட்சி ஆணையாளர் அப்துல் லத்தீப் தெரிவித்தார்.

Add Comment