தமிழக அமைச்சர் மரியம் பிச்சை விபத்தில் மரணம்; முதல் சட்டசபை கூட்டத்திற்கு சென்றபோது விபரீதம்

திருச்சி அருகே பாடலூரில் இன்று காலை நடைபெற்ற சாலை விபத்தில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை ( வயது 60 ) மரணம் அடைந்தார். தமிழக சட்டசபையில் இன்று அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படும் நேரத்தில் சட்டசபைக்கு புறப்பட்டு சென்ற அமைச்சர் விபத்தில் சிக்கி உயிரிழந்திருக்கிறார்.

சென்னைக்கு இனோவா காரில் சென்றபோது இந்த பரிதாபம் நடைபெற்றது.
பாடலூர் பிரிவு அருகே, முன்னாள் சென்ற டிப்பர் லாரி மீது அமைச்சரின் கார் மோதியதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விபத்தில் சிக்கியது குறித்து பின்னால் சென்ற அமைச்சர் விளையாட்டு துறை அமைச்சர் சிவபதி போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். இவரும் இந்த வழியே சென்னைக்கு சென்று கொண்டிருந்தார்.

மோதிய லாரி எங்கே ? தப்பி ஓடிய லாரியை தேடும் பணி தீவிரம் : திருச்சியில் இருந்து கிளம்பி காலை 7 மணிக்கு பெரம்பலூர் (இங்கிருந்து 15 .மி.மீட்டர் தொலைவில் ) திருநாயக்குறிச்சி பிரிவு ரோட்டில் பாடலூர் அருகே எஸ்கார்டு சென்ற கார் முன்னே வேகமாக சென்று கொண்டிருந்தது. இந்நேரத்தில் இந்த வழியாக சென்று கொண்டிருந்த டிப்பர் லாரிமீது ‌மோதியது. இதில் அமைச்சர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். அருகில் இருந்த டிரைவர் ஆனந்த், உதவியாளர் ஒருவர் லேசான காயமுற்றனர். விபத்திற்கு காரணமான் லாரி தப்பி ஓடி விட்டது. லாரி குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் கிடைக்கவில்லை. லாரியை பிடிக்க அருகில் உள்ள மாவட்ட எல்லை முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளது. பலியான அமைச்சர் உடல் திருச்சி அரசு Buy Cialis மருத்துவமனையில் கொண்டு செல்லலப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனைக்கு பின்னர் இவரது மரியம் தியேட்டரில் வைக்கப்படுகிறது. அங்கு மக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர்.

விபத்தில் பலியான பி.ஏ., (வரலாறு) பட்டதாரியான அமைச்சர் மரியம் பிச்சை, திருச்சி மேற்கு தொகுதியிலி்ல் முன்னாள் தி.மு.க., அமைச்சர் நேருவைத் தோற்கடித்தவர். திருச்சி சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்த மரியம் பிச்சைக்கு ஒரு மகள் மற்றும் 3 மகன்கள் உள்ளனர். திரைப்பட விநியோகஸ்தராக இருந்த இவர் திரையரங்கும் நடத்தி வந்தார்.

இன்று எம்.எல்.ஏ.,க்கள் பதவிப்பிரமாணம் : சட்டசபை முதன் முதலாக இன்று கூடவிருந்தது. இதில் தற்காலிகமாக நேற்று தேர்வு செய்யப்பட்ட சபாநாயகர் தமிழரசன் இன்று எம்.எல்.ஏ.,க்கள் அனைவருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைப்பதாக இருந்தது. இந்நிலையில் விபத்தில் அமைச்சர் இறந்து விட்டதால் இன்றைய சட்டசபை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படும் என கூறப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி சபை கூடுகிறது. எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஞ்சலி செலுத்த முதல்வர் ஜெ., புறப்படுகிறார்: அமைச்சர் உடலுக்கு அஞ்சலி செலுத்த முதல்வர் ஜெ., மதியம் ஒரு மணி அளவில் ஹெலிகாப்டர் மூலம் புறப்படவிருக்கிறார்.

Add Comment