கடையநல்லூரில் கள்ளநோட்டை புழக்கத்தில் விட்ட 3 பேர் கைது

கடையநல்லூரில் பணத்தை இரட்டிப்பு செய்திடும் வகையில் கள்ளநோட்டை புழக்கத்தில் விட்டதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்ட எஸ்பி., விஜயேந்திரபிதரி உத்தரவின்படி கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் பெலிக்ஸ் சுரேஷ்பீட்டர், buy Amoxil online தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ஆடிவேல் மற்றும் போலீசார் கடையநல்லூர் பகுதியில் கள்ள நோட்டு புழக்கத்தில் இருப்பதாக வந்த தகவலை அடுத்து தீவிர சோதனை மேற்கொண்டனர். சோதனையின்போது கடையநல்லூர் அம்பேத்கார் தெருவை சேர்ந்த கருப்பையா மகன் முத்தையா(42), செல்வராஜ்(48), முள்ளிகுளம் பஜனை மட கோயில் தெருவை சேர்ந்த கண்ணன்(90) ஆகிய மூவரையும் விசாரித்தனர். அப்போது அவர்களிடமிருந்து 500 ரூபாய் கள்ளநோட்டு புழக்கத்திற்காக விடுவதற்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சோதனையில் முத்தையாவிடம் இருந்து 7 ஆயிரத்து 500 ரூபாய் கள்ள நோட்டும், செல்வராஜ், கண்ணனிடம் இருந்து தலா 3 ஆயிரத்து 500 ரூபாய் கள்ள நோட்டும் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

Add Comment