முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு:பாப்புலர் ப்ரன்ட் அமைப்பு வலியுறுத்தல்

இஸ்லாமியர்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு அளிக்க பாப்புலர் ப்ரன்ட் ஆப் இந்தியா வலியுறுத்தியது.பாப்புலர் ப்ரன்ட் ஆப் இந்தியா மாநில பொதுச்செயலாளர் நிஜாம்முகைதீன் அறிக்கை:சட்டசபைத்தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. மூன்றாம் முறையாக முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதாவிற்கு வாழ்த்து தெரிவிக்கிறோம். மாற்றத்தை விரும்பி தமிழக மக்கள் ஓட்டு அளித்துள்ளனர். முதல்வராக பொறுப்பேற்றதும் ஜெயலலிதா பிறப்பித்த உத்தரவுகள் சிறப்பான துவக்கம்.

மின்தட்டுப்பாட்டை சீர்செய்வது, வீடு கட்ட நிதியுதவி உள்ளிட்ட வாக்குறுதிகள் வரவேற்கத்தக்கவை.சிறுபான்மையினரின் இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்தும் வாக்குறுதியை விரைவில் நிறைவேற்ற வேண்டும். மக்கள் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.இவ்வாறு நிஜாம்முகைதீன் தெரிவித்தார்.எஸ்.டி.பி.ஐ., மாநிலத்தலைவர் தெஹ்லான் பாகவி வெளியிட்ட அறிக்கையில், “”இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை 3.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக அதிகரிப்பதாக தேர்தல் பிரசாரத்தில் அளித்த வாக்குறுதியை முதல்வர் நிறைவேற்ற Bactrim online வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

Add Comment