கடையநல்லூர் எம்.எல்.ஏ.,விடம் 27ம் தேதிபொதுமக்கள் மனுக்கள் அளிக்க ஏற்பாடு

எம்.எல்.ஏ.,வாக பதவியேற்ற பிறகு அனைத்து துறை அதிகாரிகள் முன்னிலையில் பொதுமக்களிடம் கடையநல்லூர் தொகுதியில் எம்எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டுள்ள செந்தூர்பாண்டியன் மனுக்களை பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனர். வரும் 27ம் தேதி பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்படுகின்றன.தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கடையநல்லூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் செந்தூர்பாண்டியன் எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டார். சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வரும் 23,24 ஆகிய தேதிகளில் தற்காலிக சபாநாயகரான தமிழரசன் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

அதனை தொடர்ந்து எம்.எல்.ஏ.,வாக பொறுப்பேற்றுக் கொண்டவுடன் கடையநல்லூர் தொகுதியில் தேர்வு செய்யப்பட்டுள்ள செந்தூர்பாண்டியன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
அதற்கு முன்னதாக தொகுதியில் தேர்தலின் போது தெரிவித்த வாக்குறுதியின் அடிப்படையில் Buy cheap Levitra அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அனைத்து துறை அதிகாரிகளையும் அழைத்து பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு அந்த இடத்திலேயே அதற்கான தீர்வு காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வரும் 27ம் தேதி தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு செந்தூர்பாண்டியன் வருகை தருகிறார். இதற்காக கடையநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம் பொதுப்பணித்துறை சார்பில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.பொதுமக்களிடம் மனுக்களை செந்தூர்பாண்டியன் பெறவுள்ள நிகழ்ச்சியில் தென்காசி, செங்கோட்டை தாசில்தார்கள், நகராட்சி கமிஷனர்கள், கடையநல்லூர் உள்ளிட்ட மூன்று யூனியன் பிடிஓ.,க்கள் உட்பட அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் பங்கேற்றவுள்ளனர்.இதற்கான ஏற்பாடுகளை கடையநல்லூர் தொகுதி அதிமுக செயலாளர் பொய்கை மாரியப்பன், மாவட்ட துணை செயலாளர் மூர்த்தி, பொருளாளர் இலஞ்சி சண்முகசுந்தரம், ஒன்றிய செயலாளர்கள் வசந்தம் முத்துப்பாண்டி, சங்கரபாண்டியன், செல்லப்பன், நகர செயலாளர்கள் கிட்டுராஜா, தங்கவேலு, வக்கீல்கள் அய்யப்பராஜா, ஊர்மேலழகியான் செந்தில்குமார், செங்கோட்டை குருசாமி, குட்டியப்பராஜா மற்றும் அதிமுகவினர் மேற்கொண்டு வருகின்றனர்.முதன் முதலாக செந்தூர்பாண்டியன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்பதால் தொகுதியில் உள்ள அனைத்து நிர்வாகிகளும், சார்பு அணி நிர்வாகிகளும் சுறுசுறுப்புடன் இயங்கி வருகின்றனர்.

Add Comment